பக்கம்:சாவி-85.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எடுத்து, சரியாக நடுப்பகுதியில் நகத்தாலோ அல்லது கத்தியாலோ கீறி இரு கிண்ணங்களாகச் செய்து கொள்வார். பிறகு, சுளைகளைப் பந்து போல் பிரித்து எடுத்து வைத்துக் கொள்வார். பின்னர் அந்தச் சுளைகளின் மீது படர்ந்துள்ள தோல்களையும், நார்களையும் கவனமாகப் பிரித்தெடுத்து அந்தக் கிண்ணங்களில் போட்டுக் கொண்டு ஒவ்வொரு சுளையாக எடுத்துச் சாப்பிடும்போது அதிலுள்ள விதைகளை நீக்கி அந்தக் கிண்ணத்தில் வைப்பார். சாப்பிட்டு முடித்ததும் அந்த இரண்டு கிண்ணங்களையும் சேர்த்து பழையபடி ஒரு முழு சாத்துக்குடி வடிவில் கொண்டு வருவார். அப்புறம் தம்முடைய வேட்டியிலிருந்து ஒரு நூலை உருவி அந்தச் சாத்துக்குடியின் மீது பக்கோடா பொட்டலம் சுற்றுவது போல சுற்றி, பந்து போலாக்கி, அதை அப்படியே தமது ஜிப்பா பையில் பத்திரப்படுத்திக் கொள்வார். மாலையில் வீடு திரும்பும்போது ஏதாவது ஒரு குப்பைத்தொட்டி அருகில் காரை நிறுத்தச் சொல்லி, டிரைவரிடம் கொடுத்து அதில் போட்டுவிடச் சொல்வார். இப்படி எதுவானாலும் படு துல்லியமாகச் செய்வதுதான் ராஜாஜியின் வழக்கம்.' கடிதங்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பல சமயங்களில் ராஜாஜி தனக்கு உணர்த்தியிருப்பதாக சாவி சொல்கிறார். கோகலே ஹாலில் ஒரு கூட்டம். அதில் ராஜாஜி பேசுகிறார். கல்கி அவர்களும் அதில் கலந்து கொள்ளச் சம்மதம் கொடுத்திருந்தார். அன்று கல்கியுடன் சாவியும் போயிருந்தார். போகும்போது மாம்பலத்திலுள்ள ராஜாஜியின் வீட்டில் இறங்கி அவரையும் அழைத்துச் செல்வதாகத் திட்டம். கல்கி போன சமயம், ராஜாஜி தமக்கு வந்த கடிதங்களுக்கு எந்தப் பரபரப்புமில்லாமல் சர்வ நிதானமாக பதில் எழுதிக் கொண்டிருந்தார். ராஜாஜியிடம் எப்போதுமே உரிமையோடுதான் பேசுவார் கல்கி. அவர்கள் உறவில் மரியாதை கலந்த தனிப்பாசம் இருக்கும். அன்று கூட்டத்துக்குப் 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/83&oldid=824903" இலிருந்து மீள்விக்கப்பட்டது