பக்கம்:சாவி-85.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 போக சிறிது அவகாசமே இருந்தது. குறித்த நேரத்தில் போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை கல்கி அவர்களுக்கு. "கூட்டத்துக்கு நேரமாயிடுத்தே கடிதங்களை நாளைக்கு எழுதக்கூடாதா? இப்போது என்ன அவசரம்?' என்று ராஜாஜியை அவசரப்படுத்தினார் கல்கி. ராஜாஜி சொன்னார்: "கிருஷ்ணமூர்த்தி நாளைக்கு எழுதினாப் போச்சு என்பதில் எனக்கு உடன்பாடில்லை. இந்தக் கடிதத்தை எனக்கு எழுதியவர், இதே விஷயத்தை டெலிபோனில் என்னிடம் பேசியிருந்தால், இதுக்கு நாளைக்கு பதில் சொல்கிறேன். இப்போது போனை வையுங்க" என்றா சொல்லியிருப்பேன்? அப்போதே பதில் சொல்லித்தானே அனுப்பி இருப்பேன். போனில் பேசவோ, நேரில் வந்து பேசவோ முடியாததால்தானே கடிதம் எழுதியிருக்கிறார்கள்? லெட்டருக்கு பதில் எழுதறதை மட்டும் நான் ஏன் தள்ளிப் போடணும்?" எவ்வளவு முக்கியமான அறிவுரை இது! இன்னொரு உதாரணம்: ராஜாஜி அவர்கள் சுதந்திரா கட்சியைத் தொடங்கியிருந்த காலம், கட்சிப் பணி தொடர்பாக கல்கி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவரை பம்பாய்க்கு அனுப்பி முக்கிய தகவல் ஒன்றைத் தெரிந்து வரும்படி சொல்லியிருந்தார். 'போனவுடன் இதுபற்றி விசாரித்து உடனே பதில் தெரியப்படுத்து' என்று ஒரு கட்டளை போல் சொல்லியிருந்தார். ஆனால், பம்பாய்க்குப் போனவரோ மூன்று நாட்களாகியும் எந்தத் தகவலும் அனுப்ப வில்லை. நான்கு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்தார். வந்தவர் அப்போதும் ராஜாஜியிடம் போன காரியம் என்ன ஆச்சு என்று சொல்லாமல் குளிக்கப் போய்விட்டார். அப்புறம் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே ராஜாஜியைப் போய்ப் பார்த்தார். தனக்கு பம்பாய் போனதிலிருந்து வேலை சரியாக இருந்ததென்றும், 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/84&oldid=824904" இலிருந்து மீள்விக்கப்பட்டது