பக்கம்:சாவி-85.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கடிதம் எழுதக் கூட நேரம் இல்லை என்றும், மழை வேறு இடையூறாக இருந்தது என்றும் கதை அளந்தார். ராஜாஜி அவரிடம் சற்றும் கோபப்படாமல் நிதானமாகக் கேட்டார்: 'ராத்திரி எத்தனை மணிக்கு படுக்கப் போனிங்க?" 'பத்து, பத்தரை, பதினோரு மணி ஆயிடும்.' "போஸ்ட் கார்டில் நாலு வரி எழுத அஞ்சு நிமிஷம் போதுமே! அதை எழுதி விட்டு 11.05-க்குப் படுக்கப் போய் இருக்கலாமே...' ராஜாஜியின் இந்த அறிவுரை சாவியின் உள்ளத்தில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது. இன்றும் தமக்கு வரும் கடிதங்களுக்கு முடிந்த வரை அன்றன்றே பதிலெழுத சாவி பழகிக் கொண்டிருப்பது ராஜாஜியின் இந்த அறிவுரையைக் கேட்டுத்தான். சூயஸ் கால்வாயில் கட்டப்பட்ட அஸ்வான் அணை பற்றிய பின்னணி விவரங்களைச் சேகரித்து சாவி கல்கியில் சூயஸ் கால்வாயின் கதை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். அந்த அணை பற்றிப் பிரச்னை எழுந்திருந்த நேரம் அது. கல்கி இதழில் அந்தக் கட்டுரை வெளியான அன்று மாலை கோபாலபுரம் யங்மென் அசோசியேஷனில் ராஜாஜி சூயஸ் கால்வாய் பிரச்னை பற்றிப் பேச ஏற்பாடாகி இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு சாவியும் போயிருந்தார். சாவியின் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த சில விவரங்களை ராஜாஜி தம் உரையில் பயன்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல், மறுநாள் சாவியைப் பார்த்தபோது, 'உங்க கட்டுரை எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது” என்று கூறிய அவரது பெருந்தன்மையைப் பற்றிச் சொல்லிச் சொல்லி சாவி மகிழ்ந்து போகிறார். யார் எழுதியது என்பதைப் பார்க்காமல், என்ன 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/85&oldid=824905" இலிருந்து மீள்விக்கப்பட்டது