பக்கம்:சாவி-85.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே பார்ப்பது, நல்ல எழுத்துக்களை யார் எழுதியிருந்தாலும் உடனே மனம் திறந்து பாராட்டுவது என்று தாம் கடைபிடித்து வரும் பழக்கத்துக்கு ராஜாஜி அவர்கள் அன்று போட்ட அஸ்திவாரமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று சாவி கருதுகிறார். ராஜாஜி - காமராஜருக்கிடையே கருத்து வேற்றுமை இருந்த காலம். ராஜாஜி வேண்டும் என்றும், வேண்டாம்: என்றும் காங்கிரஸ்காரர்கள் இரு கோஷ்டிகளாகப் பிளவுபட்டிருந்த நேரம். அந்தக் கசப்பு மாறாத நிலையில் காமராஜரைக் கேலி செய்து, மாறுவேஷத்தில் மந்திரி என்ற நகைச்சுவைக் கட்டுரை ஒன்றை சாவி கல்கியில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துப் பார்த்த ராஜாஜி சாவியிடம் சொன்னார்: 'உங்க கட்டுரை படிச்சேன். இப்ப இருக்கிற நிலையில் இதைப் படிக்கிறவங்க மனசில ஏதோ நான்தான் உங்களை இதுமாதிரி எழுதச் சொல்லியிருப்பேன்னு ஒரு தப்பபிப்ராயம் ஏற்படலாம். இனிமேல் காமராஜரைக் கேலி செய்து எழுதாதீங்க." அரசியல் பண்புக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியுமா? - - அரசியல் தியாகிகளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தரப்படுவது அறிந்த சாவி தமிழக அரசுக்கு நிலம் கேட்டு விண்ணப்பம் போட்டிருந்தார். திரு. பக்தவத்சலம் உட்பட பல தியாகிகளுக்கு நிலம் வழங்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து தமக்கும் நிலம் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் சாவி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராஜாஜி அவர்களிடமிருந்து சாவிக்கு ஒரு போஸ்ட் கார்ட் வந்தது. முதலமைச்சர் ராஜாஜி அவர்கள் தம் கைப்பட எழுதிய கடிதம் அது : தியாகத்துக்கு விலை கேட்க வேண்டியது அவசியம்தானா?" 76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/86&oldid=824906" இலிருந்து மீள்விக்கப்பட்டது