பக்கம்:சாவி-85.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இதழிலும், தொடர்ந்து வந்த இதழ்களில் ராஜாஜி, கல்கி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் புகைப்படங்களையும் அட்டைப் படமாக வெளியிட்டார்கள். அது மட்டுமல்ல; "வெள்ளி மணி கல்கி'யின் துணைப் பத்திரிகை போலவே வெளிவரும்' என்றும் முதல் இதழில் சாவி குறிப்பிட்டிருந்தார். ஒரு பத்திரிகையிலிருந்து விலகும் எழுத்தாளர்கள் அந்தப் பத்திரிகை பற்றியும் அதன் ஆசிரியர் பற்றியும் தரக்குறை வாகவும், அவதூறாகவும் அறிக்கைகள் விடும் அற்பத்தனமான செயலை வெறுப்பவர் சாவி. (சிலம்புச் செல்வர் ம.பொ.சி. கூட ஒரு சமயம் சாவியின் இந்த உயர்ந்த பண்பு பற்றி மேடையில் பாராட்டிப் பேசியிருக்கிறார்.) ஆகவே, கல்கியிலிருந்து விலகிய போதும் சாவி யாரைப் பற்றியும் எந்த நிந்தனையும் செய்யவில்லை. அது மட்டுமல்ல; குருநாதர் கல்கியிடம் அவர் கொண்டிருந்த பக்தியும் விசுவாசமும் குந்துமணி அளவும் குன்றவில்லை. சாவியின் இந்தப் பண்பு குறித்து கல்கி கி.ராஜேந்திரன் சொல்கிறார்: "அவர் ஒரு பத்திரிகையிலிருந்து பதவி துறந்து வெளியேறி இருக்கலாம். ஆனால் வேறு சிலரைப் போல உப்பிட்டவருக்குத் துரோகம் நினைத்ததில்லை. தான் பணியாற்றிய பத்திரிகைகளையோ அவற்றின் அதிபர்களையோ தூற்றியதில்லை. மாறாக அப்பத்திரிகை யிடமும், அதன் அதிபரிடமும் நட்புரிமை பாராட்டிப் பழகி வருவார். சாவியின் அந்த நட்பு அடுத்த தலைமுறைக்கும் நீடித்து வருகிறது. உதாரணம்: வாசன் - பாலசுப்ரமணியன்; 'கல்கி - ராஜேந்திரன். வன்மம் வளர்த்துக் கொள்வது சாவி அவர்களுக்குத் தெரியாத ஒன்று.” வெள்ளி மணி எடுத்த எடுப்பிலேயே பன்னிரண்டாயிரம் பிரதிகள் விற்பனையாயிற்று. அந்தக் காலத்தில் தொடக்கத்திலேயே 80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/90&oldid=824911" இலிருந்து மீள்விக்கப்பட்டது