பக்கம்:சாவி-85.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் பன்னிரண்டாயிரம் பிரதிகள் என்பது மிகப் பெரிய சாதனை. இந்த வெற்றிப் பெருமிதத்தில் சாவியும் சின்ன அண்ணா மலையும் கனவுக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்தார்கள். இந்தக் கால கட்டத்தில்தான் கல்கி அவர்களுக்கும் நிர்வாகி திரு. சதாசிவம் அவர்களுக்கும் இடையே லேசாக முளை விட்டிருந்த கருத்து வேற்றுமை துளிர் விட்டுப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது. 'வெள்ளி மணி'யின் லே-அவுட், உள்ளடக்கம் எல்லாமே கல்கி அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. தனது மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவிக்கும் வகையில் சாவியையும், சின்ன அண்ணாமலையையும் ஒருநாள் தமது வீட்டுக்கு உணவருந்த அழைத்து வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். 'வெள்ளி மணி ரொம்ப நன்றாக உள்ளது. பேஷ், பேஷ் என்று பாராட்டினார். அப்போது ஐயங்கார் ஒருவர் கல்கி இதழின் சர்க்குலேஷன் இலாகாவில் வேலை செய்து கொண்டிருந்தார். கல்கி, அவரிடமிருந்து சந்தாதாரர்களின் முகவரிகளை வாங்கி சின்ன அண்ணாமலையிடம் தந்து "இவர்களுக்கெல்லாம் வெள்ளி மணியை இலவசமாக அனுப்பி வையுங்கள். நல்ல பலன் கிடைக்கும்' என்று சொல்லி அனுப்பினார். அவர் கொடுத்தனுப்பிய ஆறாயிரம் சந்தாதாரர்களுக்கும் வெள்ளி மணியை இலவசமாக அனுப்பி வைத்தார் சின்ன அண்ணாமலை. சந்தாதாரர்களின் முகவரிகளைக் கொடுத்த செய்தி திரு. சதாசிவம் அவர்களுக்கு எட்டி, அதுவே அவர்கள் இருவருக்கும் இடையே முளைத்திருந்த மனக்கசப்பை மேலும் வலுப்படுத்திவிட்டது. இதன் விளைவாக கல்கி அவர்கள் தொடர்ந்து அங்கே பணிபுரிய முடியாத இறுக்கமான சூழ்நிலை தோன்றியது. அதே சமயம் வெள்ளி மணியை மேலும் பலம் 81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/91&oldid=824912" இலிருந்து மீள்விக்கப்பட்டது