பக்கம்:சாவி-85.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பொருந்திய பத்திரிகையாக ஆக்க வேண்டுமென்ற எண்ணம் கல்கிக்கு உண்டாயிற்று. ஆனால், இதையெல்லாம் அவர் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஒருநாள் சாவியையும் சின்ன அண்ணாமலையையும் தம் வீட்டுக்கு அழைத்து "பெரிய பணக்காரர்கள் பட்டியல் ஒன்றை எழுதிக் கொண்டு வாருங்கள். அவர்களில் ஒருவரிடம் பேசி வெள்ளி மணிக்குத் தேவையான பொருளாதார பலத்துக்கு ஏற்பாடு செய்கிறேன்' என்றார். அடுத்த நாளே பத்து பணக்காரர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இவர்கள் கல்கியிடம் கொடுத்தார்கள். அவர்களில் திரு. ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாரைத் தெரிவு செய்தார் கல்கி. மறுநாளே ஏ.வி.எம். அவர்களிடம் பேசி வெள்ளி மணிக்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதே சமயம் சாவியைப் பற்றியும் பாராட்டிச் சொல்லியிருக்கிறார். நவகாளி யாத்திரை பற்றிச் செய்தி சேகரிக்கப் போன போது சாவி, கல்கி அலுவலகத்திலிருந்து வாங்கிக் கொண்டு போன ஆயிரம் ரூபாய் பணத்தில் செலவு போக மீதிப் பணத்தையும், செலவுக்கான ரசீதுகளையும் சென்னை திரும்பியதும் முதல் வேலையாக அலுவலகத்தில் ஒப்படைத்த நேர்மை பற்றி செட்டியாரிடம் புகழ்ந்து சொல்லி, 'சாவியை ஊக்குவிக்க வேண்டும். வெள்ளி மணிக்கு உதவி செய்யுங்கள்' என்று கல்கி சொன்னதாக செட்டியார் அவர்களே பின்னொரு சமயம் சாவியிடம் சொல்லியிருக்கிறார். விரைவில் தானும் கல்கியை விட்டு விலகி வெள்ளி மணியில் சேரக்கூடும் என்பதையும் கல்கி சூசகமாக செட்டியாரிடம் தெரிவித்திருக்கிறார். ஏ.வி.எம். அவர்களுக்கு மட்டற்ற சந்தோஷம். கல்கியே வெள்ளி மணிக்கு ஆசிரியராகப் போகிறார் என்று அறிந்ததும் வெள்ளி மணிக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்யத் தயாராகி விட்டார். 82

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/92&oldid=824913" இலிருந்து மீள்விக்கப்பட்டது