பக்கம்:சாவி-85.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சேர்த்து வைப்பதில் தீவிர அக்கறை காட்டி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கல்கி அவர்களின் மகன் கி.ராஜேந்திரனுக்கும் சதாசிவம் அவர்களின் மகள் விஜயாவுக்கும் நடைபெற்ற திருமணம் ராஜாஜி மேற்கொண்ட முயற்சியின் காரணமாகத்தான் என்பது நாடறிந்த ரகசியம். இந்தத் திருமண உறவுக்குப்பின் கல்கிசதாசிவம் உறவிலிருந்த விரிசல் நீங்கிப் பழைய நிலைக்குத் திரும்பி சுபமாக முடிந்துவிட்டது. இந்நிலையில் கல்கி அவர்கள் வெள்ளி மணியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பும், ஏ.வி.எம். செட்டியார் உதவி செய்வார் என்ற நம்பிக்கையும் பொய்த்துப் போயிற்று. விளைவாக - வெள்ளி மணியின் ஒசை ஓய்ந்து போனது. வெள்ளி மணியை ஒரு போட்டிப் பத்திரிகையாகக் கருதாமல் பேராசிரியர் கல்கி அவர்கள் அதன் வளர்ச்சியில் காட்டிய அக்கறையை நினைவு கூர்ந்து, 'அப்போதுதான் முதன் முதலாக சாவியை கல்கி அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். சுறுசுறுப்பும் ஆர்வமும் மிக்க திரு. சாவியை நான் பரிச்சயம் செய்து கொண்ட போதே, திறமையான பத்திரிகை ஆசிரியருக்கு இருக்க வேண்டிய சகல அம்சங்களும் அவரிடம் இருப்பதாக உணர்ந்தேன். எதிர்பார்த்தபடி 'வெள்ளி மணி தொடர்ந்து நடைபெறாவிட்டாலும் கூட, சாவி'க்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்று எனக்குத் தோன்றியது' என்று ஏ.வி.எம். அவர்கள், சாவி மணி விழா மலரில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 85

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/95&oldid=824916" இலிருந்து மீள்விக்கப்பட்டது