பக்கம்:சாவி-85.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மல்யுத்தப் போட்டி 'வெள்ளி மணி வார இதழ் நின்று போனதும் என்ன செய்வது, வாழ்க்கையை எப்படி வகுத்துக் கொள்வது என்ற கவலையில் ஆழ்ந்தார் சாவி, வெள்ளி மணி நின்று போனாலும், அவ்வப்போது ஏஜெண்டுகள் அனுப்பிய பழைய பாக்கிப் பணம், விளம்பரப் பணம் என்று சிறுகச் சிறுக மணி ஆர்டராகவும், செக்குகளாகவும் வந்து கொண்டிருந்தன. ஆனாலும் அந்தப் பண வசூலில் இன்னும் எத்தனை நாள் காலத்தை ஒட்ட முடியும்? இந்தச் சோதனையான நேரத்தில், ஒருநாள் வேடந்தாங்கலில் இருந்து சரோஜினி என்பவர் சாவியைப் பார்க்க வந்திருந்தார். அவர் வசதியான ரெட்டியார் குடும்பத்தில் பிறந்தவர். பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் மிக்கவர். சாவியின் எழுத்தைப் படித்து அவரது விசிறியாக மாறியவர். வந்தவர், சாவியின் குடும்பம் சிரமதசையில் இருப்பதைக் கண்டு விட்டு, 'அண்ணா, நீங்க கஷ்டப்படத் தேவையில்லை. சீக்கிரமே நாம் ஒரு பத்திரிகை ஆரம்பித்து நடத்தலாம். பத்திரிகைக்கு ஒரு நல்ல பெயர் மட்டும் யோசிச்சு வையுங்க. நான் ஊருக்குப் போய்ப் பணம் கொண்டு வருகிறேன்' என்று ஆதரவாகவும் அதே சமயம் உறுதியாகவும் சொல்லிவிட்டுக் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுப் போனார். சரோஜினி விருப்பப்படி 'வாடாமலர்' என்ற மாத இதழ் தொடங்கப்பட்டது. மாதா மாதம் பணம் போய்க்கொண்டே 86

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/96&oldid=824917" இலிருந்து மீள்விக்கப்பட்டது