பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



VIII



அமுக்குக் கூடையில் நிரப்பி , சுகம் தேடும் எலும்புத்துண்டுகளாக, மூலதன மூட்டைகளுக்குச் சேவகம் புரியும் மாரீசர்கள் இவர்கள்.

இந்தச் சூழல், தமிழ் இலக்கியத்துக்கு நிரம்பவே பொருந்தும். மனிதநேயப் படைப்பாளிகளை, நாம் நேசிக்கவே வேண்டும். அதே வேளையில், அவர்களைப் பீடித்துள்ள பழைய சிந்தாந்தப் பிடிப்பின் பீடைகளால் எழும் குழப்பங்களை, மென்மையாகவே விமர்சிக்கவும் வேண்டும். அவர்களை வென்றெடுப்பதும், நமது நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் மாரீசர்களுடன் நாம் கடுமையாகச் சமர் புரிந்தேயாக வேண்டும்.

இன்று, எத்தனையோ வகை இலக்கியப்போக்குகள் சந்தைக்கடை விரித்துள்ளன. மனித வாழ்க்கைக்குச் சம்பந்தப்படாத எந்த இலக்கியப்போக்கும் நிலைக்கப் போவதில்லை. சந்தைக்கடை வியாபாரம் போல், கொஞ்ச நேரச் சலசலப்புத்தான். ஆனால் இவை விளைவிக்கும் தீங்குகளை, நாம் சாதாரணமாக எண்ணிவிடக்கூடாது.

தேசிய அவலம்

இன்று, நமது வாழ்க்கையில் என்றுமில்லாத அளவுக்கு சமூக நெருக்கடி உருவாகியுள்ளது. மனித வாழ்க்கை, துன்ப வேதனைகளில் மூழ்கியுள்ளது. வேலையின்மை, வறுமை, விபச்சாரம், திருட்டு, கொலை, பாலியல் பலாத்காரம் போன்ற சமூகக் கொடுமைகள் உருவாக்கிய தீமைகள் ஒருபக்கம்; மறுபக்கம், சுரண்டல், ஊழ்ல், அதிகார வர்க்கக் கொடுங்கோன்மை, நாட்டின் வளத்தைக் கொள்ளையிடுதல் போன்ற ஆளும் வர்க்கத்தினரின் செயல்பாடுகள். இவற்றையெல்லாம் தேசிய அங்கீகாரம் போலவே நடத்திக்காட்ட விரும்புகிறார்கள்.