பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாமந்தி
சம்பங்கி
ஓணான் இலை


அந்தப் பிள்ளையார் கோவிலுக்கும் - அதற்கு எதிரே இருந்த பூக்கடைகளுக்கும், காய்கறிக் கடைகளுக்கம் இடையே ஏதோ ஒரு பொருத்தம் இருக்க வேண்டும். மாலை பிறந்த நேரம், அந்த கோவிலில் அர்ச்சகர் பூக்களை வைத்துக் கொண்டு 'ஓம் வக்ர துண்டாயா' பன்றபோது, கீரைக்காரி மாரியம்மாள் தண்டங்கீரை தண்டு ஒன்றை ஒடித்துக் கொண்டிருந்தாள். அவர் 'ஓம் விகடாயநம' என்று சொல்லி, ஒரு பூவைப் போட்டபோது, பூக்காரர் ஒருவர், சும்மா 'கும்'முன்னு ஆடினார். இன்னும் சொல்லப்போனால், அவர் ஆடவில்லை. அவர் ரத்த ஓட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக நாடி நரம்பு எங்கும் ஓடிக் கொண்டிருந்த 'தண்ணி' அப்படி ஆட்டி விட்டது! கடைகளும், மனிதர்களும் ஒன்றான வேளை.

மத்தியான வெயிலுக்காக சற்று தொலைவிலுள்ள தூங்குமூஞ்சி மரத்தருகே நிறுத்தி வைத்திருந்த பழ வண்டியை தள்ளிக் கொண்டு சின்னானும், அவன் மனைவி பார்வதியும், பஸ் நிலையத்திற்கு அருகே வந்தபோது, "தோ.. அந்த சோமாறி நெஞ்சை பார்த்து நீட்டா உருட்டுப்பா... தத்தேரி கயிதே... இந்தண்ட வான்னா காதுல ஏறல..." என்றாள் பூக்காரி தாயம்மாள். வாய் பேசினாலும், கைகள் அவை பாட்டுக்கு சாமந்திப்பூவைக் கட்டிக் கொண்டிருந்தன. உடனே சின்னான் மனைவி, "நானுந்தான் உன்கு எத்தனைவாட்டி சொல்றது? ஆறுவயசு பையனை அம்மணமா விட்டா எப்பிடி... டேய் சோமாறி நெஜார் பூடாண்டா.." என்று சொல்லியபடியே வாழைப் பழங்களை வண்டியில் பரப்பினாள். நிஜார் போடாத அந்தச் சிறுவனின் உடம்பைப் பார்த்ததும்