பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

97


அடிக்கிறாள்... 'எம்மா எம்மருமவளே... இப்படி மாரடைச்சி அழதம்மா. அப்புறம் அந்தக் கிழட்டு முண்டைக்கு அடிச்சழுது தொண்டக் கட்டிட்டு... தலை வலிக்குன்னு' திட்டப்போற... நீ மருந்துக்கும் என்ன மாமியாரா நினைக்கலேங்கறது நிசந்தாம்மா... இல்லாட்டா... மருந்து கொடுக்க வந்த எம்பேத்தி ஆடலரசிய மாட்டுத் தொழுவத்துக்குத் தொரத்தி இருக்கமாட்டே... ஆமா.. எம்பேத்தி ஆடலரசியோட சத்தத்தைத் காணுமே... ஒரு வேளை நாவிதற்குப் பதிலா அவளையே துட்டி சொல்ல அனுப்பி இருப்பாகளோ.. மருமகக்காரி அப்படிப் பட்டவதானே... எம்மா!... எம்மருமகளே! உனக்கும் ஒரு மருமகள் வரத்தான் செய்வாள்... அய்யோ... கடவுளே... என்னை சாபம் போட வைக்காதே... அவளும் நல்லா இருக்கட்டும்... ஆனாலும் எம்மகன் என்ன மாதிரி முந்திக்கிட்டா... அவள் 'என்னை பாடாபடுத்தின மாதிரி அவனையும் படுத்தப்படாது... கடவுளே... கடவுளே... இந்த வரத்தை கொடு தெய்வமே... நான் உங்கிட்ட சீக்கிரமா வரணும்...'

திடீரென்று ஒருமித்த ஒப்பாரி: அந்த அறையை பூகம்பமாகியது. பாட்டி சரியாகத் தான் யூகித்தாள். துட்டிஷ கேக்க ஊர் சனம் வந்துருக்கு... தாழ்வாரம் வரைக்கும், கிண்டலும் கேலியுமாய் சிரிச்சிப் பேசிக்கிட்டு வந்த ஊர்க்காளிக, உள்ளே வந்ததும் மாரடிச்சி அழுகிறாளுக... அதுவும் ஒருத்திய ஒருத்தி கண்ணடிச்சிக்கிட்டும். நகை நட்ட பார்த்துக்கிட்டும் அழுவாளுங்க... எத்தனை எழவு வீட்ட பாத்துருக்கேன்.. ஆனாலும் இங்க எழவு விழாமலே எழவு நடக்குது.. ஒருவேளை நான் செத்துப் போயிருப்பேனோ...

கனகம்மா பாட்டி குழம்பிப் போன போது, ஒரு பெரிய அதட்டல் அந்த ஒப்பாளிக் கூத்தும், உடனடியாக அடங்கியது. அப்படி அடங்கியதும் ஒரு உரையாடல்.

ராமய்யா... ஒன் பெரிய தங்கச்சிய காணுமே ...

'அவள் கதை உமக்குத் தெரியாதா? சின்னத் தங்கச்சி கல்யாணத்துக்கு இவளுக்கு போட்டத விட பத்து பவுன் அதிகமா போட்டேன். இவள் குதியா குதிச்சாள். தங்கச்சிக்கு போட்ட அதிக நகை தனக்கும் போடணுமுன்னு கத்தினாள்... நான், இந்தக் காலத்து