பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/122

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

வாழ்க்கைப் பாக்கி


விலைவாசிய கணக்குல எடுக்கச் சொன்னேன். உடனே கணக்கு தீர்த்துட்டாள்... இனிமே இந்த வீட்ல கால் வைக்க போறதில்லைன்னு சபதம் போட்டாள். அம்மா, அவள் நினைவா கிடக்கிறதை ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினேன்... அப்படியும் வரல...

உரையாடலில் ஒரு இடைவேளை... ஒப்பாரியை விட்டுவிட்டு உற்றுக் கேட்டவர்களின் கசாமுசா சத்தங்கள்... சத்திரஞ்சாவடி முணுமுணுப்பு... கனகம்மா பாட்டியும், மகளை மானசீகமாக மூளைத்திரையில் ஏற்றி, நியாயம் கேட்டாள்..

'நான் பெத்தமகளே... என்னை விட்டு நீ பிரியப்படாதுன்னு உள்ளூர்லேயே வசதியான மாப்பிளைக்கு உன்னை கட்டிக் கொடுத்தேன். கடைசியில உன்னைப் பெத்த இந்த அம்மாவோட எடை பத்து பவுன் எடைய விட கொறைஞ்சு போயிடுச்சேட... இதுக்கு மேலயும் நான் அரைகுறையாய் இருக்கணுமா?.. இன்னும் இந்தப் பேய்ப்பய மூளை என்னைவிட மாட்பேங்குதே'..

ஒப்பாரி பாடல்கள், கிண்டலும் கேலியுமான வசனங்களுடன் உச்சத்திற்கு போன போது மீண்டும் ஒரு அதட்டல், ஒப்பாரிக்காரிகள் மீண்டும் கதை கேட்க, வாய்களை மூடி, கண்களைச் சிமிட்டி, காதுகளில் கவனத்தை ஒன்றித்தபோது -

'ராமய்யா.. ஒன் தம்பிமாருக்கு சேதி சொல்லிட்டியா?'...

'மெட்ராஸ்காரன், நாளைக்குத்தான் வர முடியுமாம்.. பிரேதத்த பாதுகாக்க முடியாட்டால், அடக்கம் செய்யச் சொல்லிட்டான். காரியத்துல கலந்துக்குவனாம். இந்தச் சந்தர்ப்பத்தில, பாகப் பிரிவினையும் வச்சுக்கணுமாம். பதினைஞ்சு நாளைக்கு முன்னேயே சேதி சொல்லியும், பெத்த தாயை எட்டிப் பாராத பயலுக்கு சொத்து வேணுமாம் சொத்து கொடுத்துடுவனா?',

'அப்புறம் அமெரிக்காக்காரன்?'

'பெரிய தம்பியா. பாவம் இப்பதான், அமெரிக்காவுல புதுக் கம்பெனி ஆரம்பிச்சுருக்கானாம்.. அப்படி இருக்கயில எப்படி வரமுடியும்? ஆனாலும், போன வாரமே சொல்லிட்டான். எவ்வளவு டாலர் வேணுமுன்னாலும் அனுப்புவனாம். அம்மாவோட சமாதிய