பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/124

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

வாழ்க்கைப் பாக்கி


இன்ஸ்பெக்டருக்கு, சீரோடும் சிறப்போடும் கட்டிக் கொடுத்தாள். அந்த மகளுக்கு, நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மலடிப் பட்டத்தை மறுக்கப் பிறந்தவள் இந்த ஆடலரசி. அய்ந்து வயதிலேயே, பச்சை அரைப்பவாடை, வெள்ளைச் சட்டையுமாய் இங்கிலீஸ் பள்ளிக் கூடத்துக்குப் போனவள். ஏறும் போதும் வேனு.. இறங்கும் போதும் வேனு.. குவியாமலும், கவியாமலும், நீளாமலும், சுருங்காமலும் உள்ள அவள் முகத்தில், கண்னை மட்டும் பார்த்து முடிக்க கால்யுகமாகும்; மூக்கைப் பார்த்து முடிக்க முழு யுகமாகும். அப்பேர்ப்பட்ட நளினம். ஆனாலும், இவளுக்கு பன்னிரெண்டு வயசு வந்த போது, அப்பன்காரன், லஞ்சத்துல மாட்டி, ஜெயிலுக்கு போயிட்டான். அவமானம் தாங்காமல் சொர்ணமும், துக்குப் போட்டு தன்னைத் தானே கொன்னுக்கிட்டாள். தாய் மாமனே அடைக்கலமுன்னு, இந்தச் சின்னச் சிட்டு, இங்க வந்தது. ஆனாலும் இவளை மாட்டுத் தொழுவத்துலேயே மாடாய் போட்டுட்டாக, தினம் ஒரு குட்டு... மாதம் ஒரு சூடு... இவளும் பாட்டியும், ஒருத்தருக்கு ஒருத்தர் முட்டுக் கொடுத்தார்கள். இரவில் படுக்கையில் பாட்டியை சிக்கனெப் பிடித்துக் கொள்வாள். பாட்டிம்மா! என்று ஒசையிட்டபடியே, தூக்கம் கலைப்பவள். இன்றைக்கோ நாளைக்கோ பெரிய வளாய் ஆகப்போகிற மதர்ப்பு... அதற்காகவே மகனும் மருகளும் காத்திருக்கிறார்கள். மருமகளின் புத்தி பிசகிய மாமா மகனுக்கு, இவளை கொடுக்க போவதாக ஒருநாள் பேச்சு அடிபட்டது. பாட்டியின் காதுபடவே பேசிக் கொண்டார்கள். உடனே காமாட்சியான பாட்டி, காளியானாள். 'உனக்கும் பெண் இருக்குடா என்று அதட்டினாள். என் உயிர் இருக்கிறவரைக்கும். இப்படிப்பட்ட பொருந்தாக் கல்யாணம் நடக்காதுடா...' என்று சபதம் போட்டாள். 'இப்போ இந்தச் சின்னச்சிறுக்கி, என்ன ஆவாளோ? எப்படி போவாளா? கடவுளே. கடவுளே. கண்ணில்லாத கடவுளே...'

கனகம்மா பாட்டியின் மூளை, பழைய பதிவுகளை புதுப்பித்துக் கொண்டிருந்தபோது -

'பாட்டிம்மா என்னத் தனியா விட்டுட்டு போகாதே. பாட்டிம்மா. என்னையும் கூட்டிட்டுப் போ. நான் உயிரோடு இருக்க மாட்டேன்'.