பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

வெள்ளித் திரையும், வீதித் திரையும்



'அப்போ என்னக் கட்டிக்க விரும்பாததுக்கு காரணமாவது சொல்லு...'

'காரணம் இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். விருப்பம் இல்ல... நீங்க ஆயிரம் தடவக் கேட்டாலும் இதே பதில்தான்.'

'ஒன்னை நம்பி டி.வி.காரணக்கூட கூட்டிக்கிட்டு வந்திட்டேன். நாடு முழுக்க செய்தி போயிட்டுது. கடைசில ஒன்னால நான் தலைகுனிஞ்சு...'

'நிறுத்துங்கத்தான். ராமன் கெட்டதும் பெண்ணால... ராவணன் கெட்டதும் பெண்ணால என்கிறது மாதிரி பேசாதிங்க...'

'கோபப்படாதே கயல்விழி... இந்தக் கல்யாணம் நடக்காட்டால் நான் திரையுலகத்தில தலை நிமிர்ந்து நடக்க முடியாது... எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்கே தெரியல...'

'ஒங்களுக்குத் தெரியாத சினிமா வழியா?... 'என் மாமா மகள், சின்ன வயசிலிருந்தே என்னை சகோதரனா நெனச்சு பழகிட்டாளாமுன்'னு சொல்லிடுங்க... ஒங்களுக்கும் நல்லது... எனக்கும் நல்லது...'

'ஆனாலும் காரணத்த...'

அக்னிநாத்துக்கு புரிந்ததோ புரியவில்லையோ. கயல்விழி சொன்னதில் பல காரணங்கள் இருப்பதுபோல் பட்டது. தரையில் அழுத்தமாகக் கால் பதித்தப்டியே ஒவ்வொரு வார்த்தையும் ஒலி குறையாமல் முழுமையாய் வெளிப்பட இயல்பாகப் பேசினாள்.

'சரியத்தான்... எனக்கு நேரமாகுது... இந்தப் பகுதியில ஒரே சாதிக்கலவரம்... அண்ணன் தம்பியாப் பழகுனவங்க... கவுரவர்களாயும், பாண்டவர்களாயும் ஆயிட்டாங்க... அதனால மத நல்லிணக்கத்தையும், வகுப்பு ஒற்றுமையையும் வலியுறுத்தி, இன்னைக்கு வெட்டாம்பட்டியில வீதி நாடகம் போடப்போறோம். நாயகர் நாயகி இல்லாத நாடகம்... ஒருத்தன வீரனாக்குறதுக்காக முப்பது பேரை பேடியாக்காத நாடகம் என்னோட வாழ்க்கைக்கு அர்த்தத்தை