பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

119


கிடையாது. என்ன செய்யுறது?. கல்லூரிப் படிப்புக்கு எதிர் படிப்பை இந்த செக்கரட்டேரியட்டில் சொல்லிக் கொடுக்காங்க. எனக்கும் சிக்கல் வரக்கூடாது பாருங்க.'

'ஒங்களுக்கு சிக்கல் வந்தால், அது எனக்கு இன்னொரு சஸ்பென்சன் மாதிரிம்மா. இது சத்தியமான வார்த்தம்மா... உங்க தலைமையிலதான் என் பொண்ணோட கல்யாணம் நடக்கும்.

பர்வின், கரிசமணி இல்லாத தன் கழுத்தைத் தடவியபடியே, செயலாளர் அறைக்குள் நுழைந்தாள். ஒரு முனையில் தலைதாங்கும். நாற்காலியும், பளபளக்கும் அரைவட்ட மேஜையும், மறுமுனையில் சோபா இருக்கைகளுமான, அந்த விசாலமான அறைக்குள், செயலாளருக்கு தலை தாழ்த்தி வணக்கம் தெரிவித்தபடியே, எதிர் நாற்காலியில் உட்கார்ந்தாள். தொலைபேசி கூச்சல்கள். இன்டர்காம் அலறல்கள், கணிப்பொறி மாய்மாலங்கள், பேக்ஸ் கருவிக்குள் இருந்து விடுபடத்துடிக்கும் காகிதம், தொலைக்காட்சிப் பெட்டியின் கிரிக்கெட் லூட்டிகள் என்று பல்வேறு அவதானங்களை ஒரேசமயத்தில் கவனித்த செயலாளரின் புருவச்சுழிப்பு இவள் புன்னகையால் போய்விட்டது. உடனே, செயலாளர் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் சத்தத்தை நீக்கிவிட்டு, காட்சிகளை ஊமையாக்கி, அவளையும் ஊமையாய்ப் பார்த்தார்.

'மாணிக்கத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரித்த விசாரணை அதிகாரி அறிக்கையில் நேரில் பேசவுமு'ன்னு எழுதியிருக்கிங்க சார். அதனால வந்தேன்.

'நாளைக்கு வச்சுக்கலாமே, டென்டுல்கர் என்னபோடு போடுறான் பாருங்க.'

'நன்றே செய்க - அதுவும் இன்றே செய்க'ன்னு நீங்க சொல்வீங்க சார். ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் சார்.

'சரி. முடியாதுன்னா விடுவிங்களா.'

அந்த அரசுச் செயலாளர். ஒரு 'புரோமோட்டி' துணைச் செயலாளர். இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் உப்புவைத்து ஊற