பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
XIII

ஊழியர்களைப்பற்றியும், அதிகார வர்க்கத்தின் லஞ்ச ஊழல் அசிங்கத்தைப் பற்றியும், முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல்வாதிகள், அமைச்சர்களின் ஊழல், ஒழுங்கீனம் பற்றியும், கண்டன விமர்சனத்தோடு, கலையழகு மிளிரச் சித்தரிக்கப்பட்டிருப்பவை.

இவரின் எழுத்துநடை, எளிமையும், வீண் மினுக்கித்தனம் இன்றியும், சுருக்கென்று தைக்கும் ஈட்டி முனை போன்ற கூர்மையும் உடையது. எல்லாவற்றுக்கும் மேலாக, போலித்தனங்களை அம்பலப்படுத்தும் நகைச்சுவை சொற்பிரயோகங்களும் இவருக்குக் கைவந்த கலையாக மிளிர்கிறது. இந்த அணுகுமுறையை, விந்தனுக்குப் பிறகு, இலக்கியப்படைப்பில் தோழர் சமுத்திரம் அவர்கள்தான் வெற்றிகரமாகக் கையாண்டு இருப்பதாகப் படுகிறது.

“பால் பயணம்”- “திருப்பம்” - இந்த இரண்டு கதைகளும், அற்புதமான நகைக்கவை நிறைந்த கதைகள், இப்படியான கதைகளைப் படித்து, வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரித்து நீண்டகாலமாயிற்று. ஆண்டன் செகாவின் எழுத்தையும், கிஷன் சந்தர் எழுத்தையும் படிக்கும்போது, இந்த உணர்வு நிறையவே கிடைக்கும். தோழர் சமுத்திரம் அவர்களிடமும் நகைக்சுவை நிறையவே ஊற்றெடுக்கிறது. பொதுவாக எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத அற்புத வரமிது.

வார்த்தை ஜாலமற்று, அர்த்த ஜாலம் புனைவதில் நிகரற்று விளங்குவதை, இவரின் சொற்றொடர்கள் படிப்போரை வியப்படைய வைக்கும். அவற்றில் சில:

 “சம்பந்தத்தைச் சம்மதமாய் பார்த்தபடி நடந்தாள்”

“அந்த ஒட்டம், உயிரோட்டமாகி விட்டது” '