பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பம்


நீலா, தனது சபதத்தை இப்படி நிறைவேற்றிக் காட்டுவாள் என்று ராமலிங்கம் நினைக்கவே இல்லை. அரசுப் பயணமாய், டில்லி சென்ற இருவாரக் காலத்திலும், அவள் சபதம் ஒரு பொருட்டாக தோன்றவில்லை. அப்படியே சிற்சில சமயம் வந்போது 'பைத்தியக்காரப் பொண்ணு' என்று மனதிற்குள்பேச, அந்தப்பேச்சே வாய் மத்தியில் கோடிட்டது. வீட்டுக்கு வந்ததும், அவளைச் சமாதானப் படுத்தவேண்டும் என்றுகூட நினைத்திருந்தார். அந்தப் புறா, தனது குஞ்சுகளோடு, பறந்துபோனதை, இன்னும் அவரால் நம்ப முடியவில்லை.

நம்பித்தான் ஆகவேண்டும் என்பது போல் அந்த பெரிய கதவில் ஒரு சின்னப் பூட்டு, ஒரு பெரும் உறவை, ஒரு சின்ன விவகாரம் சிதைத்து விட்டது என்பது போல் காட்டும் காய்ப்பு பிடித்த பூட்டு. மூன்றடுக்கு தேக்குத் தாமரைப்பூக்கள் பொறித்த அந்த கதவிற்கு வலது பக்கமாய் திறந்திருந்த ஒற்றைச் சன்னல் வழியாய் கண்களை ஊடுருவவிட்டார். முன்னறை முழுவதும் விதவிதமான காகிதச் சுருள்கள்.... துண்டுப்பட்ட சணல்கயிருகள். எல்லாவற்றிற்கும் மேலாய், முன்னால் - துருத்தி, பின்னால் வளைந்து கலைப்பாடாய்த் தோன்றும் சீனப் பொம்மையைப் போல் தேக்குச் சட்ட வேலியிட்ட கண்ணாடிப் பேழை வெறுமையாய் தோற்றம் காட்டியது.

ராமலிங்கம், அந்தச் சாளரத்தின் இரும்புப் புருவங்களை ஒரு குத்துக்குத்தியபடியே. காரில் சூட்கேஸ், பெட்டிப்படுக்கை வகையறாக்களை, முதலைபோல் வாய் திறந்த டிக்கியிலிருந்து எடுத்துக்கொண்டிருந்த டிரைவருக்கு. கைகொடுக்கும் வழக்கத்தை மறந்தவராய், மாடிப்படிகளில் குதித் தோடினார். வீட்டுக்குள் நுழைந்ததும் நுழையாததுமாக 'நீலா' என்று அவர் இழுத்தபோது, மங்கையர்க்கரசி 'இப்போ உங்களுக்கு திருப்திதானே' என்று சொல்லிவிட்டு, அவர்