பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

XIV

 “அடித்ததில் களைப்பும். உதைத்ததில் இளைப்பும்...”
 “நெருப்பாய் வந்தவர், நீராய்ச் சொட்டினார்”

இப்படி கதைக்குக் கதை, இவரின் பொருள்மிக்க சொல்லாட்சியை பரந்துபடக் காணலாம்.

“பாம்புக் கயிறு” - பந்தாவும், போலிக் கெளரவமும் கொண்ட “ஏ-ஒன்" ஆபிசரின் அகம்பாவ குணத்தைத் தோலுரித்துக் காட்டும் கதை கூடவே அந்த முரடருக்குள் இருக்கும் மனிதாபிமானத்தையும் சமுத்திரம் சுட்டிக்காட்ட தவறவில்லை. அதேபோல் “உப்பைத் தின்னாதவன்”, “ஒருவழிப்பாதை” ஆகிய கதைகள் அதிகார வர்க்க ஊழலையும், அடாவடித்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் கதைகளாகும். இதேவகையில், “நான்காவது குற்றச்சாட்டு” எனும் கதை நேர்மையான, நிரபராதியான அலுவலர் மீது, பொய்யான குற்றச்சாட்டு. அது விசாரணையின் போது, பொய்யென நிரூபிக்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை செயலரோ மோசமான அதிகாரவர்க்கத் திமிரோடு, அறிவிலி போல விசாரணைத் தீர்ப்பை புறந்தள்ளுகிறார். இதன்வழியாக ஒரு நேர்மையான அலுவலருக்கு, அநீதியாய் இழைக்கப்படும் தண்டனை, நம் மனதை நோகவைக்கவும், நொறுங்கிப் போகவும் செய்கிறது. இதொரு அற்புதமான படைப்பு.

வாழ்க்கைப் பாக்கி...

அமைச்சர்கள், சினிமாநடிகர்கள் போலீஸ்காரர்கள், விபச்சாரிகள், ஆட்டோ ஒட்டுநர்கள் இப்படி வகைவகையான பாத்திரங்கள் இக்கதைகளில் படைக்கப்பட்டுள்ளன. அவற்றை விளக்கிப் பேசுவதற்கு