பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

திருப்பம்


நாய்க்கு முன்னால் கையைக் கொண்டு போய், சுவையான சோறிருக்கும் இலையை சுட்டிக்காட்டினார்.

அந்த நாயோ, வாயருகே உள்ள அந்த சாதத்தைப் பொருட்படுத்தாமல் அப்படியே கிடந்தது. மீன் வாசனைக்கு தடைவிதிப்பது போல் அதன் மூக்குத் துவாரங்கள் இடுக்கிக் கொண்டன. அவர் அங்கே இல்லாதது போல் கண்களை மூடிக்கொண்டன.

ராமலிங்கம் நின்று பார்த்தார். சொல்லிப் பார்த்தார். காகங்களை விரட்டிப் பார்த்தார். அந்த நாயின் கண்படும் தொலைவில் போய்ப்பார்த்தார். அக்கம் பக்கம் வேடிக்கைப் பார்த்தவர்களை பொருட் படுத்தாது அந்த நாயை மட்டுமே பொருட்படுத்தினார். ஆனாலும் அந்த நாய், அவர் வரவை அங்கீகரிக்காமல் அப்படியே கிடந்தது.

அதிர்ச்சியுற்ற ராமலிங்கத்திற்கு, ஒரு கிராமத்துச் சொல்வடை, அவரைமீறி, ஒரு சுய பரிசீலனையாக, மனதிற்குள் பெருக்கெடுத்தது.

அவனை நாய்கூட திரும்பிப் பார்க்காது என்பர்களே.... அந்த அவன் நான்தானோ...!

மின்னம்பலம் - செப்டம்பர், 1999