பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/189

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

165


'நல்ல வேளை... தலையோட போகாமல் காலோட போச்சுது. இந்தாப்பா... லாரி வந்துட்டுது... இவங்க ரெண்டு பேரையும் தூக்கிட்டுப் போங்க அப்புறம்... எல்லாரும் ஒரு விசயத்த தெரிஞ்சுக்கணும். இந்த பூமியில் நாம அண்ணன் தம்பியாய் பழகுறோம். ஏதோ போதாத காலம் இப்படி ஆயிட்டுது. ஆனாலும் நிச்சயம் ஒரு தொகையை போட்டுக் கொடுக்கச் சொல்லுறோம். இங்கே யாரவாது வெளியாளு வந்தால், ஒருத்தரும் மூச்சு விடக்கூடாது. அப்படிவிட்டால் மறு நிமிஷமே நாங்க மோப்பம் பிடிச்சுடுவோம். அப்புறம் எங்கமேல வருத்தப்படக்கூடாது. உங்களுக்கு தெரிஞ்சத நீங்க செய்தால், எங்களுக்கு தெரிஞ்சத நாங்க செய்வோம். செய்திருக்கோம். இதுல ஒளிவு மறைவு வேண்டியதில்ல. ஏண்டா பெருமாள் மாடு மாதிரி பார்க்குற? சட்டையில ரத்தக்கறை பட்டா படட்டுமே. நீயும் அந்த அம்மாவுக்கு ஒரு கைகுடு, பழையபடியும் சொல்றேன். இப்படி நடக்கிறது இங்க சகஜம். இது வெளில தெரிஞ்சால் மாமூல் ரேட்டு கூடுமே தவிர மத்தபடி எதுவும் நடக்காது’.

விம்மி வெடிப்பது போல் நின்ற ஒரு சொரி கல்காரி, கொம்பன் மேஸ்திரியை நிமிர்ந்து பார்க்கிறாள். ஆண்டாண்டு காலமாக தொலைந்து போன முகத்தை கண்டு பிடித்தவள் போல், இதுவரை கத்தாத கத்தாய் கத்தினாள். கொம்பன் மேஸ்திரியின் சத்தத்தால் மெளனப்பட்ட கூட்டம் சொரிகல் காரி கத்தி முடித்துவிட்டு பேசியதை உற்றுக் கேட்டது.

“எதுவும் நடக்காதா ஏன் நடக்காது? இந்த பார்வதி கூட்டுறவு பயலுகக்கிட்டயோ, தொழிலாளர் நல பயல்கள் கிட்டயோ சொன்னது மாதிரி, ஆயிரம் பேரை மெம்பரா கொண்ட நம்ம கூட்டுறவுச் சங்கத்துக்கு இந்த மலை சொந்தம். இந்த மலையை எல்லாரும் உழைச்சு அனுபவிக்கனும் என்கிறது தான் சட்டம்”.

ஆளுக்கு ஆள் பேசப் போனார்கள், சந்தை இரைச்சல், இதற்குள் ஒரு நடுத்தர உழைப்பாளி அனைவரையும் கை அமர்த்தி விட்டு சொரிகல் காரி விட்ட இடத்தை தொடர்ந்தார்"