பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

பாம்புக் கயிறு


"ஒனக்கு அறிவிருக்காய்யா? டில்லி முக்கியமா? தேர்ட் புளோர் முக்கியமா? நீ சரியான தேர்ட் ரேட் பெல்லோ மொதல்ல டெல்லிக்கு எஸ்.டி.டி போடுய்யா"

பல்லோர் முன்னிலையில் தன்னைப் படாத பாடுபடுத்திய அர்ச்சுனனின் வாயில் மானசீகமாய் இரண்டு குத்துக்களை விட்டபடியே, சண்முகம் டெலிபோனைச் சுழற்றியபோது, அர்ச்சுனன், தலையை ஒரு சுழற்றுச் சுழற்றியபடி தனது அறைக்குப் போனார். வாசலில், அந்த மசால் தோசைப் பெண்கள் இருப்பதைப் பார்க்காமல், அதே சமயம் அவர்களை இடித்தபடியே இருக்கையில் வந்து தொப்பென்று உட்கார்ந்தார்.

அந்த அர்ச்சுனப் பூனையிடம், யார் மசால் தோசையைக் கட்டுவது என்று வாதம் செய்த வசந்தாவும் மங்கையும் இறுதியில் சமரசப்பட்டு அந்தச் சின்ன தோசையை, ஆளுக்கொரு பக்கமாகப் பிடித்தபடி, ஏதோ எலியைத் தூக்கிக் கொண்டு வருவதுபோல் அவர் மேஜை முன்னால் போட்டார்கள். அர்ச்சுனன், கொடுத்தவர்களைப் பார்க்காமல், கொடுத்ததையே பார்த்தார். பிறகு, ஐந்து நிமிடத்தில், இலையைத்தான் விட்டு வைத்தார். அவர் சாப்பிடுவது வரைக்கும் அந்தப் பெண்கள் அங்கேயே நின்றார்கள். அர்ச்சுனன் வாஷ் பேசினுக்குச் சென்று வாயைக் கழுவாமல், கைக்குட்டையில் அதை துடைத்தபோது, வசந்தா உதடுகளை ஈரமாக்கியபடி கேட்டாள்.

"ஸார்... மசால் தோசை ஒன் பிப்டி. காசு கொடுக்கிறீங்களா?"

அர்ச்சுனன், மீண்டும் கோபமாக இருக்கையை விட்டு எழுந்தார். மசால் தோசையை திண்பது போல் வாயை வைத்துக்கொண்டு பயங்கரமாய்க் கத்தினார்.

"ஏம்மா வசந்தா ஏம்மா மங்கை நான் ஒரு கிளாஸ்-ஒன், குரூப் ஏ ஆபீசர். ஒரு மசால் தோசைக்குப் பெறமாட்டேனா? ஆப்டர் ஆல், ஒன் பிப்டி சீ... இந்தாங்கம்மா. ரெண்டு ரூபாய், ஒன் பிப்டி தோசைக்கு. பிப்டி பைசா அதை நீங்க கொண்டு வந்ததுக்குக் கூலி. ஏம்மா பொம்மை மாதிரி நிற்கிறீங்க? பிசையற கையை எடுத்து அந்த ரெண்டு ரூபாயைத் தூக்குங்கம்மா. ஐ ஸே டேக் தி டு அண்ட் கெட் அவுட் ஒன் திங்... யூ