பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாசமிக்க இலக்கிய வசிட்டரின் வாயால்...
சமுத்திரத்தின் எழுத்துக்கள் சமுதாயத்தில் உள்ள சில கேடுகளை, குழப்பங்களை, புண்களைப் போக்குவதற்கு என்றைக்கும் ஆயுதமாகப் பயன் படக்கூடிய எழுத்து.

முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள்.


முற்றும் தெளிந்த இலக்கியவாதி மூலமாய்...
வாழ்க்கையையும், மனிதர்களையும், சமூக நிலைமைகளையும் புரிந்து கொள்வதற்குத் துணை புரிவன சமுத்திரம் கதைகள், சிரிக்கவும், சீற்றம் கொள்ளவும், சிந்திக்கவும் உதவுகிற உணர்ச்சியுள்ள படைப்புகள்.

- வல்லிக்கண்ணன் அவர்கள்


ஒரு தோழமையின் கணிப்பாய்...
சு. சமுத்திரம், இலக்கியப் பத்திரிகைகளில் எழுதும்போது, அவற்றை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வருகிறார் வணிகப் பத்திரிகைளில் எழுதும்போது, அவற்றை இலக்கியத்திற்கு நெருக்கமாக கொண்டு வருகிறார்.

ச. செந்தில்நாதன் அவர்கள்


நக்கீரப் பேராசிரியர் முன்னுரையாய்...
மக்கட் பெருங்கடலுள் இரண்டறக் கலந்து மானிட சமுத்திரம் நானென்று கூவு' என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். எழுத்தாளர் சமுத்திரமும், இந்த மனித நேயக்குரலைத் தனது எழுத்துக்களில் இடைவிடாக எழுப்பிக் கொண்டு வருபவர்.

- முனைவர் இரா. இளவரசு அவர்கள்


பதிப்புச்செம்மல் முனைவரின் நம்பிக்கையாய்... சமுத்திரத்தின் சக்தி வாய்ந்த எழுதுகோல் தொடர்ந்து நல்ல படைப்புகளை நல்கும் என்பது என் உறுதியான நம்பிக்கை.

- முனைவர். ச. மெய்யப்பன் அவர்கள்


சமூகச் சிந்தனையாளர் கருத்தாய்... சமுத்திரம் தனக்கே உரிய நடையில், சமூக அவலங்களைச் சாடுகிறார். இவரின் எழுத்தாணி, நையாண்டி நடனம் ஆடுகிறது. வாள் துனியாக மாறி, வாழ்க்கையின் அவலங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது; ஊழி நர்த்தனம் ஆடி, உலகைத் திருத்தப் பார்க்கிறது.

- பேராசிரியர். அரசு மணிமேகலை அவர்கள்