பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சு. சமுத்திரம்

41


ஏமா... உனக்கும் புள்ளக்குட்டி இருக்கு... என் வயிற எரியவிடாதே

பாத்திமாவுக்கு திடீரென்று, இன்னும் மஞ்சள் காமாலை சுகமாகாத தனது மூன்று வயது மகளின் நினைவு மனதை உடனடியாய் அரித்தது. இந்த ஆசாமியின் சாபத்தால், மரணம் மகளை பறித்துவிடக் கூடாது என்கிற பயம். அப்படி பயப்பட பயப்பட அதுவே கோபமாய் குணமாறியது. ஆபீஸ்ரைக் காட்டிக் கொடுத்தால், அவன் தனது அந்தரங்க குறிப்பேட்டில் வில்லங்கம் செய்து, அதனால் நெருங்கி வரும் பதவி உயர்வு ஓடிவிடக் கூடாதே என்று இதுவரை பல்லைக் கடித்து பொறுத்தவள். இப்போது வட்டியும் முதலுமாய் முழங்கினாள். ஆபீஸ் ரகசியத்தை எல்லோருக்கும் கேட்கும்படி கத்தலாகச் சொன்னாள்.

'நாள்காலி பணம் மூணு மாசத்துக்கு முன்னாடியே வந்துட்டுது... இங்க இருந்த ஆபீஸ்ருதான் முழுங்கிட்டான்... கவலப்படாதிங்க பெரியவரே... இப்பவே மெட்ராசுல இருக்கிற எங்க டெப்டி டைரக்டருக்கிட்ட டெலிபோன்ல பேசி, நடந்ததைச் சொல்றேன்... உங்க மொதலாளிக்கும் டெலிபோன்ல விஷயத்தை சொல்றேன்...'

'சாகப் போறவனுக்கு பாலு கேட்டால், பசுமாடு குட்டி போடட்டும்னு சொல்ற கதை மாதிரி இருக்கு...'

பாத்திமாவின் முகம் இறுகியது. கடற்கரைப் பாண்டி சொன்னதை காதுகள் உள்வாங்கவில்லை. மஞ்சள் காமாலை மகள் டெலிபோன் குமிழை எடுத்துக்கொடுப்பது போன்ற பிரமை, சுழற்றினாள். ஏழு அதிசயங்கள் எட்டானதுபோல் சென்னைக்கு லைனும் கிடைத்து விட்டது. அதுவே ஒன்பது ஆனதுபோல் 'ஊர் சுற்றி' டெப்டி டைரக்டரும் உடனே கிடைத்து விட்டார். அவர், தன் கண் முன்னால் நிற்பது போல் அனுமானித்து எல்லா விவரத்தையும் விளக்கமாய்ச் சொன்னாள். இடையிடையே பேசாமல் கேட்டாள். பிறகு டெலிபோனை வைத்துவிட்டு பொதுப்படையாக ஒரு விவரம் சொன்னாள்.

'நம்ம டெப்டி டைரக்டருக்கு மூளையே இல்லை. நான் ஆப்ட்ரால் ஒரு அக்கவுண்டன்ட்... ஒரு கிளாஸ் ஒன் அதிகாரியைப் பற்றி எப்படி கம்ப்ளைன்ட் செய்திருக்க முடியும்... எனக்கும் 'மெமோ' கொடுக்கப்