பக்கம்:சிக்கிமுக்கிக் கற்கள்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

காவலாளி


"என்ன கதிரு... சுகமா இருக்கியா?

"கதிர் வேலுக்கு அந்த இருளே ஒளியானது போன்ற உணர்வு..." அவரைத் தெரியாதவர் யாருமில்லை. அப்பேர்ப்பட்ட அவர் இவனைத் தெரிந்து வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல... பதினைந்து நாளைக்கு முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக கலெக்டர் இங்கே வந்தபோது, சூப்பர்வைசர் அய்யா. இவனைக் கூட்டிக் கொண்டு இவரிடம்தான் போனார். உடனே, இவர் கலெக்டருக்கு முன்னால் இவனை இழுக்காத குறையாய் கூட்டிக்கொண்டு போனார். 'இவன் தங்கமான பையன் சார். இப்போ இங்கே என்.எம்.ஆர்.ஆக இருக்கான். இவனை உடனடியாய் நீங்க பெர்மனன்ட்டாக்கணும்... இவனுக்கு நீங்க செய்யுற உதவி எனக்கு செய்யுறமாதிரி', என்று அடித்துச் சொன்னவர். கலெக்டரை தலையாட்ட வைத்தவர். இவனோட மேற்பார்வையாளருக்கு ஜூனியர் இன்ஜினியர், பங்களா தெய்வம். அந்த டி.இ.க்கே காவல்தெய்வம் கலெக்டரய்யா... அந்த தெய்வத்துக்கே தெய்வமான தெய்வம் இந்த அய்யா... கூட்டங்களில் நீட்டி முழக்கி பேசுகிறவர் அதிகாரிகளை நடுங்க வைப்பவர். எம்மாடி... எப்பேர்பட்ட மனுசன் நம்மகிட்ட பேசுறார்... கதிர்வேலு அவரிடம் பேசப் போனான். குரல் வயிற்றுக்குள் போனதும், நாக்கு வெளியே வந்ததும்தான் மிச்சம். ஆனாலும் அவர் மனங்கோணாமலே மீண்டும் பேசினார்.

அப்புறம், 'உன்ன நிரந்தரமாக்கி அவரு, டிவிஷனல் என்ஜினியர்கிட்ட பேசினாரு. இப்பக்கூட சிரிப்பு வருது... கலெக்டர் வடநாட்டுக்காரறா... ஒன் பேரை அவர் கடிச்சகடி இருக்குதே இப்ப கூட சிரிப்பு வருது... கண்டிப்பா சொன்னார்... டி.இ.யும் சம்மதிச்சதா சொன்னார். இருக்கட்டும். இருக்கட்டும்... கவனிக்கிற விதமா கவனிக்கணும்... ஒனக்கு ஒரு வாரத்தில் ஆர்டர் வராட்டால் ஒன்று நான் இருக்கணும். இல்ல கலெக்டர் இருக்கணும்..."

கதிர்வேலு வாயகல நின்றான்... அந்தக் கார் வெளிச்சத்தில் அவரைப் பயபக்தியோடு பார்த்தான். எம்மாடி... ஈஸ்வரன் கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உதவுறாறே... அப்படிப்பட்ட உதவி... அய்யா