பக்கம்:சிட்டுக் குருவி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நிச்சயம்

வண்ணச் சோலை தன்னிலே,
வளரும் செடிகள் நிச்சயம்.
வளரும் செடிகள் மீதிலே,
மலர்கள் உண்டு, நிச்சயம்,


மலர்கள் தம்மைத் தேடியே,
வண்டு வருதல் நிச்சயம்.
வண்டு தேனை வாரியே,
கொண்டு போதல் நிச்சயம்,


20