பக்கம்:சிட்டுக் குருவி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பார்



கடலின் மீது செல்லுங்கப்பல்
பார், தம்பி, பார்-அதைக்
காணப் பலர் வருவதையே,
பார், தம்பி, பார்.


“தடத டென்று அலைகள் வந்து,
பார், தம்பி, பார்-காலைத்
தழுவி விட்டுப் போவதையே,
பார், தம்பி, பார்.


சங்கும் நல்ல கிளிஞ்சில்களும்
பார் தம்பி, பார்-இங்கே
சரள மாகக் கிடைக்குதடா,
பார், தம்பி, பார்.

35