பக்கம்:சிதறல்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 "இல்லை அந்த முடிவுக்கு வந்துவிட்டேன். உங்களை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்." "அவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. 'நீங்கள் என் ரசிகர்' "ஆமாம்' "என்ைேடு வாழவேண்டும் அதாவது விரைவில் என் கணவராக ஏற்றுக்கொள் ளப்போகிறேன்.' அவன் தன் தாடியைத் தடவிக்கொடுத்தான். "இது விளையாட்டு அல்ல. நீர்தான் என் காதலர் என்பதை என் தாய் நம்புகிருள்; என் பாட்டி நினைக்கிருள்; என் தங்கை வேறுவிதமாக அவளுக்கு எண்ணத் தெரியாது.என் மாஜி கணவர் சாமியாராகிவிட்டார். மன அமைதி தேடி அலை கிருர். என் தோழி ஆஷா வாழ்க்கையில் ஒரு பிடிப்பைத் தேடி அலைகிருள். ரவியை அவளிடம் ஒப்படைக்கப் போகிறேன்."

ஏன்?" 'ரவி அைைத ஆகக்கூடாது. அவனை வளர்க்க ஒரு தாய் வேண்டும் அதற்கு அவள்தான் சரி'.

ஆஷாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. "அப்படியால்ை இவர்' "இவர் அவர் அல்ல:ஆல்ை அவர் ஆவதற்கு வேண் டிய விருப்பு இருக்கிறது. என்னை விடாமல் தொடர்கிருர்' "அதைத் தடுத்து இருக்க வேண்டும். அமைதியாகச் சொல்லி அவரை விலகச்சொல்லி இருக்கவேண்டும்." "எதற்காக? அம்மா பாட்டி என் ‘அவர்' எல்லாரும் அப்படி நினைக்கும்பொழுது" "அவர்கள் நினைத்தால்' - "அதைச் செயல்படுத்துவதுதான் நான் அவர்களுக் குச் செய்யத்தக்க கைம்மாறு.' "எ ன்னடி உனக்கு என்ன பைத்தியமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/106&oldid=825425" இலிருந்து மீள்விக்கப்பட்டது