பக்கம்:சிதறல்கள்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 "வாழ்க்கையே ஒரு சிதறல் அதுதான் உண்மை. நீ உன் கணவனோடு வாழநினைத்தாய்; அதற்காக நீ உன் தொழிலை விட்டாய் பிறகு உன்னல் அவரோடு வாழமுடிய வில்லை. மறுபடியும் நீ மற்ருெரு லட்சியத்தை நாடுகிருய். பெண்மை தாய்மையாக மாறுகிறது. நீ உன்னை ஏதோ ஒரு லட்சியத்துக்குத்தர விரும்புகிருய். சமூகத்துக்கு உன் ல்ை நேரிடையாக எந்தத் தொண்டும் செய்ய முடிய வில்லை. அதற்கு ஒரு வெளிப்பாடாக ரவியை நாடுகிருய். என் அம்மா நான் கெட்டுவிட்டதாக நம்புகிருள். அவ ளால் நான் யோக்கியமாக வாழ முடியாது என்று நினைக் கிருள். எனக்கு அவளே பட்டம் கட்டிவிட்டாள். அவ ளால் வேறுவிதமாக நினைக்க முடியவில்லை. இவரையும் நான் போ என்று எப்படிச் சொல்ல முடியும். என் உடன் படித்தவர்; என்ளுேடு திரைப்படம் பார்க்க வந்தவர். நான் ஒரு படம் பார்த்தேன் அதில் ஒரு டயலாக் வருகிறது. “Love without sex is empty.” இதுவரையும் இவர் இந்தக் கொள்கையோடுதான் சுற் றிக்கொண்டுவந்தார். இதற்கு ரசனை, நட்பு, அன்பு, பாசம் இந்தச் சொற்கள் பயன்படுத்தப்பட்டன. 'ஆசை" ஒன்று இல்லாவிட்டால் இந்தச் சொற்களுக்கு அர்த்தம் இல்லை என்பதை நன்ருக உணர்கிறேன். நாங்கள் பழகுகிருேம், பேசுகிருேம், எங்கள் உணர்வு களைப்பற்றி அல்ல; பொதுச் செய்திகளை ப்பற்றி. கல்லூரி நாட்களிலும் அந்தக் கவிதைப் பயித்தியம் ஆசிரியரோடு பல செய்திகளை விமரிசனம் செய்து இருக்கிறேன். அவர் கவிதைக்கு நான் தூண்டுதலாக இருக்கலாம். அல்லது என் கவிதைக்கு அவர் துண்டுதலாக இருக்கலாம். அந்த அனுபவங்கள் வெறும் நினைவுகள் தான், நான் இவரோடு பல இடங்களுக்குச் சென்ற இருக் கிறேன். கடற்கரையில் மணிக்கணக்காகப் பேசி இருக் கிறேன். ஆனுல் நெருங்கியது இல்லை. வாய்ப்புத் தந்தால் அவர் உணர்வுகளைத் துண்டி இருக்க முடியும். நான் தூண்டவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/107&oldid=825428" இலிருந்து மீள்விக்கப்பட்டது