பக்கம்:சிதறல்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 சாதாரண என் பேச்சுக்கும், குரலுக்கும் என் புன்ன கைக்குமே இவர் தன்னை மறந்து தாடியை வளர்த்துக் கொண்டிருக்கிருர். இவரை என்னைத் தொட, சுருக்கமாகச் சொன்னல் என்னையே இவருக்குத் தந்திருந்தால் இவர் பைத்தியமாகவே மாறிவிட்டிருப்பார். இப்பொழுது என்னை இவருக்குக் கொடுக்க முடிவு செய்து கொண்டுதான் பேசுகிறேன். இதுவரை இந்த உலகத்தில் நேர்மையாகவே வாழ்ந்தேன்; உயர்ந்த லட் சியங்களுக்காகவே வாழ்ந்தேன்;பேசினேன்; பழகினேன்; சிந்தனைகளை வெளியிட்டேன். என் கணவன் என்னை நம்ப வில்லை. அவற்றை மதிக்கவில்லை. நான் கெட்டு இருக்க வேண்டும் என்று அவர் நினைக்கிரு.ர். அவர் நினைவைப் பொய்யாக்குவது நல்லது அல்ல; அவர் நம்பிக்கைக்குத் துரோகம் செய்யக் கூடாது. நான் கெட்டு இருக்கவேண்டும் என்று நினைத்து என்னைவிலக்கி விட்டார். நான் அவரிடம் காதல் பிச்சை கேட்கமாட் டேன்; அதை அவமானமாகக் கருதுகிறேன். என்னிடம் மண்டியிடக் காத்துக் கிடக்கும் இந்த இளைஞனிடம் என்னை ஒப்புவிக்கத் தீர்மானித்து விட்டேன். இந்த அவல வாழ்க்கையில் நான் ஒரு சுவர்க்கத்தைத் திறக்க முடியுமால்ை ஏன் அதை உண்டாக்கக் கூடாது. என்னைச் சுற்றி வரும் இவருக்கு ஏன் நான் சுகவாழ்வு தரக்கூடாது. நான் இதுவரை கெடவில்லை. கெட நினைக்கவில்லை; இப்பொழுது கெடாமல் இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு இந்தக் குழந்தை என்னிடம் வளரமுடியாது. என் பழி பாவம் அவனைச் சுற்றிக் கொள்ளும். ஒரு விபசாரியின் மகன் என்று உலகம் சொல்லும். கணவனுக்குத் துரோகம் இழைத்தவளின் மகன் என்று சுற்றுப்புறம் பேசும், அவ னிடம் நான் தான் தாய் என்று சொல்லாதே. அவனைப் பெற்றவளைப் பற்றி அவனிடம் பேசாதே. வளர்த்தவள்; வளர்க்கப் போகிறவள் தோன். நீதான் அவன் தாய். ஒரு குழந்தைக்காகக் கணவனையும் இழக்கத் தயார் என்று நீ பேசிய சொற்கள் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/108&oldid=825430" இலிருந்து மீள்விக்கப்பட்டது