பக்கம்:சிதறல்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

சிலபேருக்கு முதல் புத்தகம் வெளிவந்ததும் தன் பிரியமானவர்களிடமிருந்து வாங்கிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நான் படிக்கிற காலத்திலே அப்படித்தான் அந்த ஆசிரியரும் 'கவிதைகள்' எழுதுவார். நல்ல நாவல்கள் எழுதக்கூடிய ஆசிரியர் அவர் வீணாகக் கவிதைகளை எழுதிக்கொண்டு இருப்பார். அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.

அவர் ஒரு புதுக்கவிதைப் பைத்தியம். சின்ன நிகழ்ச்சி ஒன்று பார்த்தாலும் உடனே கவிதை எழுதிவிடுவார். அது எப்படித்தான் அந்தக் கற்பனை உதயமாகிறதோ ஆச்சரியமாக இருக்கும். அவர் தமிழ் நடை நன்றாக இருக்கும். இனிமையான சொற்கள் அருவிபோலசசுகமாக இருக்கும். அந்த நடை நல்ல நாவல் எழுதலாம். போயும் போயும், உதிரிகளாக வரும் கவிதைகளை எழுதிக் காலத்தைப் போக்குவார்.

இன்னொருவர் கவிதை எழுதுவார். அது வெறும் சொல்லடுக்குகளாக இருக்கும். ஆகா, ஓகோ என்று அலட்டிக் கொள்வார். தாம் கவிதைக்காகவே பிறந்தவர் என்று அலட்டிக்கொள்வார். அதுவேறு யாரோ ஒரு பரிசு கொடுத்துவிட்டார்களாம். நான் பரிசுபெற்ற கவிஞர் என்று எப்பொழுதும் சொல்லிக்கொள்வார். போட்டியிலே யாருக்காவது பரிசு தந்துதானே ஆகவேண்டும்.

இன்னொருவர் அவர் தன்னை மரபுக் கவிஞர் என்று சொல்லிக்கொள்வார். அதாவது ஒசை கெடாமல் பாடுகிறார் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் எப்பொழுதாவது ஒரு முறை எழுதுவார் அவ்வளவுதான்.இன்னொருவர் இருக்கிறார். அவர் பட்டிமன்றப் பேச்சாளர். எந்தப் பொருளையும் வெட்டியும் ஒட்டியும் பேசுவார். அவருக்குக் கைதட்டல் என்றால் உயிர். அந்த 'ஒசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/25&oldid=1258286" இலிருந்து மீள்விக்கப்பட்டது