பக்கம்:சிதறல்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

"ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்" என்று யாரையோ குறிப்பிட்டது என் நினைவுக்கு வருகிறது. 'காமராசர் ஒரு சகாப்தம்' என்ற பெயரை எங்கோ கேட்ட நினைவு; அது ஒரு கவிதைப் புத்தகம் என்று நினைக்கிறேன். அவர் அரசியல் காமராசர், இவர் கவிதையில் காமராசர். இருவரும் இரண்டு புதிய சகாப்தங்களே உண்டாக்கினார்கள். உண்டாக்கி இருக்கிறார்கள்.

மிகவும் கண்ணியமான அரசியலை நடத்தித் தந்தவர் காமராசர். எனக்குப் பொழுது போகாவிட்டால் காமராசரைப் பற்றி நினைவு வரும், இல்லாவிட்டால் நான் படித்த கல்லூரி நினைவுகள் வரும். நான் படித்த ஆண்டுகள் இரண்டும் என் வாழ்வில் மறக்க முடியாதவை.

நான் மேல் படிப்புப் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அது, இலக்கியம் பயின்றேன். அந்த நாட்கள் வீணாகி இருக்கின்றன. நீளமான கோட்டு, நெற்றியில் சந்தனப் பொட்டு இப்படி ஒரு ஆசிரியர். அவர் திருக்குறளைத் தவிர வேறு எதையும் ஒப்புவித்து நான் கண்டது இல்லை. தனக்குத் திருக்குறள் தலைகீழ்ப்பாடம் என்று சொல்லிக் கொண்டு இருப்பார். எதையுமே அவர் இந்த இரண்டு அடிகளால் தான் அளப்பார். அதற்கு மேல் அவருக்குப் படிப்பிக்கத் தெரியாது.

இன்னொரு பைத்தியம் இருந்தார். திடீரென்று சித்தர் உலகத்தில் போய் விடுவார். அப்பொழுது எல்லாம் நான் சொன்னேனே அந்தச் சினிமா நண்பன் அவர் முன் சீட்டில் உட்கார்ந்துக் கொண்டு இருப்பார் அவர் மீது ஒரு அம்பு போடலாம் போலத் தோன்றும். ஏன் இந்த எண்ணம் வந்தது தெரியாது.

எங்கள் மீது இந்த ஆண்பிள்ளைகள் காகித அம்பு போடுவார்கள். நான் சில சமயம் அதைப் பிரித்துப்பார்ப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/29&oldid=1258290" இலிருந்து மீள்விக்கப்பட்டது