பக்கம்:சிதறல்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வீட்டுக்கு வருவார்கள். அன்று நான் ஒரு மணப் பெண் போல இருப்பேன். அப்பொழுதெல்லாம் எனக்கு மணமாகவில்லை.

சம்பிரதாயமான பட்டுப் புடவை கட்டிக் கொள்வதில் தனி மகிழ்ச்சி அடைவேன். எனக்குப் பிடித்த ‘காப்பிக் கலர்’ புடவை இன்னும் பத்திரமாக வைத்து இருக்கிறேன். காதில் 'பல்லி' வடிவம் கம்மல் ஒன்று அதைப் போட்டுக் கொள்வேன். என் சினேகிதிகள் அதையே பார்த்து ரசிப்பார்கள், சே! இது என்ன? பாஷன் என்பார்கள், அது நானே தனியாகச் சொல்லிச் செய்து கொண்டேன் என்று செல்லுவேன்.

அது அப்படிப் பரவிவிட்டது. அவர்களும் இப்பொழுது ஒருவர் இருவர் செய்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

எதுவுமே யாரோ ஒருவர் முதலில் ஆரம்பிக்க வேண்டி இருக்கிறது. அதை மற்றவர்கள் சுலபமாகப் பின்பற்றி விடுவார்கள். ஆஷா அந்தப் பிறந்த நாள் விழாவுக்கு வருவாள். அவள் குள்ளமாக இருந்தாள் என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவள் என் பக்கத்தில் நிற்க வெட்கப்படுவாள்.

நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ பிடித்துக்கொண்டோம், அந்த ஸ்டுடியோவில் எங்கள் படத்தை மாட்டி வைத்திருக்கிறார்கள். அது அவனுக்கு ஒரு விளம்பரப்படமாக அமைந்து விட்டது. எதிலும் ஒரு முரண்பர்டு இருந்தால் தான் அது ரசிக்கத் தக்கதாக இருக்கிறது.

ஒரு தாய் தன் மகனைப் பிரிந்து வேதனைப்படுகிறாள். அவன் வெளிநாட்டுக்குச் செல்கிறான். அவன் பிரிவைத் தாங்க முடியாமல் வருந்துகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/61&oldid=1288596" இலிருந்து மீள்விக்கப்பட்டது