பக்கம்:சிதறல்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81 அந்த மயக்கங்களைத்தான் எழுத்து வடிவில் வைத்துக் காத்தேன், அதன் முன்னுரையில் எழுதி இருந்தேன். "என்னைப் பிரித்துப் பார்க்காதே இது என் நாட்குறிப்பு இது எனக்கு மட்டும் தான் சொந்தம்' மற்ருேர் இடத்தில் எழுதியிருந்தேன். "நான் தற்கொலை செய்து கொள்ள மாட்டேன். அந்த அவசியம் ஏற்படாது; அப்பொழுதுதான் என்னைப் போஸ்ட் மார்ட்டம் செய்யலாம், டைரியைப் பார்ப்பது போஸ்ட் மார்ட்டம் செய்வதற்குத்தான்" என்றும் எழுதி இருந்தேன். "நான் உனக்கு எப்படிக் காணப்படுகிறேனே அப்படியே பார்; பழகு; அதற்குமேல் என்னை அறிந்து கொள்ள முயற்சி செய்யாதே' என்றும் எழுதி வைத்திருந்தேன். நான் மருத்துவ மனையில் இருந்த நாட்கள் ரவி என்னுள் இருத்தவன்; நான் தான் உன்னைத் தாயாக்கிய தனையன் என்று வெளிப்படுத்திக் கொண்ட நாட்கள். நான் அமைதியாக இந்த உலகத்திலிருந்து விடுதலை பெற்று இருந்த நாட்கள். கன்றைப் பற்றி நினைத்து அதற்குச் சூடு உண்டாக்கிக் கொண்டிருந்த பசு நான்; என் மார்பு எனக்கு வடிவம் தந்தது. அதைக் கண்டு என்பெண்மையை வியந்தவர் 'அவர்'; அதைக் கொண்டு என் தாய்மையை உணர்த்தியவன் என் ரவி. அவன் வாய் வைத்துச் சுவைக்கும் பொழுது என் தாய்மை பாலாகச் சுரந்து வடிந்தது. அவனை அணைத்துக் கொண்டு என் சேலைத்திரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/82&oldid=825603" இலிருந்து மீள்விக்கப்பட்டது