பக்கம்:சிதறல்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 மனம் குளிர்ந்தது; மகிழ்ச்சி நிறைந்தது. ஏதேதோ பேசினேம்; வாழ்க்கைப் பிரச்சனை; பரிட்சைப் பிரச்சனை; திரைப்பட விமரிசனம்; இன்னும் எத்தனையோ செய்திகள் பேசிமுடித்தோம். கீழே வந்தோம்; அங்கே ஒரு பிணம். அந்தத் தண்ணிரில் அடித்து வந்ததாம். அவன் யார்? ஏன் செத்தான்? எப்படித் தெரியும்? அதைப் பற்றிப் போலீசார் புலன் விசாரித்தனர். அவன் டையரி குறிப்பு சில்லரைக் காசுகள் அழகிய பெண்ணின் வண்ணப் படம் இவை அவன் விட்டுச் சென்றவை. அவன் செத்தான் அதல்ை சிரிக்க முடியவில்லை. அவள் சாகவில்லை சிரித்துக் கொண்டே இருந்தாள். ஏன் செத்தான்? நிதானித்துப் பார்த்தேன். அந்தச் சிரிப்புக்குத்தான் அவன் செத்து மடிந்தான். யார் சொன்னது? எப்படித் தெரியும்? அதையும் அவனே எழுதி வைத்தான்." அந்தக் கவிதை தான் இவனைப் பற்றி நினைக்கும் பொழுது நினைவுக்கு வருகிறது. இவன் செத்து மடிய வில்லை. வாழ்ந்து செத்துக் கொண்டிருந்தான். இவனுக்கு இந்த நனடமுறை உலகில் ஒரே வெறுப்பு அதை மறக்க அந்தப் படங்களில் தன் முக்கியமான நேரத்தைக் கழித்தான், ஏன் திரைப் படங்களுக்கு இவ்வளவு கூட்டம்? இங்கே வாழ்வதற்கு, நினைப்ப்தற்கு. சிந்திப்பதற்கு, ரசிப்பதற்கு, பேசுவதற்கு விஷயங்கள் கிடைப்பது இல்லை. அவ்வளவு தூரம் நம் குடும்பச் சூழ்நிலைகள் அமைந்து விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/86&oldid=825611" இலிருந்து மீள்விக்கப்பட்டது