பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமூலர் பூசாவிதி

80

செய்திடு பாத்திரம் சேர்ந்திடு மந்திரம் கைதிடச் சொல்லக்கேள் கசிந்தஞ்சு பாத்திரம் அய்திடத்தான்ே அச்சதை மேற்போட்டுக் கொய்திட மந்திரங் கொமட்டிநீ பார்த்திடே. பார்திடு மன்மன் பட்சம்பலகாரம் கோர்த்திடு அண்டம் குக்குட மேசமும் சாத்திடு புட்பம் சந்தனங் குங்குமம் ஏத்திடு தீபம் ஏகச்சிறப்பே. சிறப்பான சத்திக்குச்சீராபரணமும் மறப்பான் புட்பமும் வரிசையும் சந்தனம் நிறம்பாகக் குங்குமம் நேரானதாபமும் உறப்பாய்ச் சூடமும் கொடுத்திடு பூசையே.

பூசைகடந்து புகட்டிடு பாத்திரம் ஆசையுடனே ஐயுங்கிலிவா வென்று ஒசையுடனே உறவுகிலி யென்று பாசிய சவ்வும் பரிச்சென்று ஈய்ந்திடே.

ஈய்ந்திடு பானம் உருஞ்சச்சடாதாரம் வாய்ந்திடப் பூரிக்கில் மனோமணிக்கே என்றும் சாய்ந்திடப் புத்தியும் தவறாமல் மேல்நோக்கும் ஆய்ந்திட்ட மந்திரம் அப்பா செபஞ்செய்யே. - செபிக்கிலோர் மந்திரம் சிவவசி வாவென்று அபிக்கிலோர் மந்திரம் அன்னஞ் செரிப்பிக்கக் கபிக்கிலோர் கையால் கண்டதவ முத்திரை நபிக்கிலோர் வயிரவன் நற்தாளைப் பூசிடே.

29

3/

33