பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் 85.

பண்ணப்பாஓராண்டு செய்தாயானால்

பராபரமே உனக்குவந்து ஏவல்செய்யும் விண்ணப்பா ஒருவருக்கும் மணிசொல்லாதே வேதாந்த நரகத்தே கிடந்து மாய்வார் கண்ணப்பா உனக்கேத்த பிள்ளையானால்

கைமுறையாய்ச் செய்து அவன் குணத்தைப் பாரு ஒண்ணப்பா கருவைத்தான்் ஒளிக்கவில்லை

உற்றுணர்ந்து மனந்தேறிப் பாரு பாரே. 6

பாரப்பாஇதற்குக்கைலாசமுண்டாம்

பாரார்கள் சித்தரிதை மறைத்துப் போட்டார் ஆரப்பாஎனைப்போலே திறந்து சொல்வார்

ஆச்சரியம் இதனுடைய வேகமப்யா ஒரப்பாஇதனாலே யோகசித்தி

உத்தமனே சிவபூசைபண்ண நன்று காரப்பாஇதுதனக்குப் பூசைசெய்துக்

கருவாக அர்ச்சனைசெய் பதங்கஞ் செய்யே. 7

செய்யப்பா இப்படியே பூசைகொண்டு

திறமாகச் செய்யவல்லோ பலத்தைக் கேளு மெய்யப்பா அவனுடைய பிதுர்க்களெல்லாம்

மிகக்கோடி நரசென்ம மல்லவல்ல பொய்யப்பா சொல்லவில்லை தேர்ந்து பாரு

புலத்தியனே உன்றனக்குக் கருவைச் சொன்னேன் வையப்பா பூசையிலே என்னை வைத்து

மவுனமாய்ச்சிவனைவைத்து நோக்கு நீயே. . &