பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXIV சித்தர்கள் பூசாவிதிகள்

அள்ளியெடுத்துமுட்டியாகப் பிடித்துச்சுட்டுவிரல் நிமிர்த்த பரிகைமுத்திரையினாலே'ஓம்கவசாயநம: எனத்தன்னை வலமாகச் சுற்றுக. இதுவே கவச வேஷ்ணமாம்.

இனிச் சதாசிவத் தியானமும் காயத்திரி செபமும் செய்த பின் தர்ப்பணம் செய்க.

சதாசிவத் தியானம்

சூரிய மண்டலத்திலே இருக்கிற சதாசிவ மூர்த் தியை உச்சியிலே ஈசானமுகம் படிகநிறமாய் இளமை வயதாய் நிருதி திசை நோக்கி இருப்பதாகவும் தற்புருஷ முகம்கோங்கம்யூநிறமாய்த்தருணவயதாய்மேற்குத்திசை நோக்கி இருப்பதாகவும், அகோரமுகம் கருமை நிறமாய் விருத்த வயதாய்த் தாடியுள்ளதாய் வடதிசை நோக்கி இருப்பதாகவும், வாமதேவ முகம் சிவந்த நிறமாய் ஸ்தீரீ முகமாய்த் தென்திசை நோக்கி இருப்பதாகவும், சத்தி யோசாதகமும் பால்நிறமாய் பால வயதாய்க் கீழ்த்திசை நோக்கி இருப்பதாகவும் முகங்கள் தோறும் முக் கண்ணும் சடாம குடத்தில் கொன்றைமாலை அர்த்த சந்திரனும் திருமேனியெல்லாம் சுத்தமான படிக நிறமுமாயிருப்ப தாகவும் வலக்கை ஐந்தில் வேல் அபயம் சூலம் கட்டங்கம் தமருகமாகிய ஐந்தும் இடக்கை ஐந்தில் வரதம், மாதுளங் கனி, சர்ப்பம், செபமாலை, நீலோற்பலமாகிய ஐந்தும் இருப்பனவாகவம் பதினாறு வயதும் முப்பத்திரண்டு இலட்சணமும் இரண்டு ரீபாதங்களும் உடையவராகவும் வைத்துப் பத்மாசனத்திலே எழுந்தருளி இருக்கிற அவதாரமாய் இருதையத்திலே தியானம் பண்ணுக.