பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XXVII

தர்ப்பித்துப் பின்னர் பூனூல் கழுத்திலே மாலிகைபோலத் தரித்து விரலிறையால் திருமுத்திரையினாலே அதாவது இருகையும் இணைத்துவிரல்களின் இடைவெளியினாலே 'சர்வேப்பியோ ரிஷிப்பியோ' என்றும் சிறு விரல்களின் அடியால் சடாமுத்திரையால் சர்வேப்பியோ மனுஷேப் பியோ வெளஷட் என்றும் இருகையும் இணைத்து மணிக்கட்டால் ஆற்பணான முத்திரையால் தனக்கு எதிராகச் சர்வேப்பியோ பூதேப்பியோ வெளஷட்' என்றும் தர்ப்பித்துப் பின்பு பூணுல் இடமிட்டு இருகையும் சேர்த்து சுட்டுவிரல் அடிகளில் பெருவிரல் நுனிகளைச் சேர்த்த கண்டின முத்திரையால் வலக்கைப் பெருவிரல் அடியால் எள்ளுடனே 'சர்வேப்பியோ பிதிருப்பியோ சுவதா சர்வேப்பியோ மாதிருப்பியோ சுவதா என்று மேற்படி கண்டினமுத்திரையால் சுட்டுவிரல்மூலத்தால் எள்ளுடனே 'சர்வேப்பியோ ஞாதிருப்பியோ சுவதா சர்வேப்பியோ' ஆசாரியப்பியோ சுவதா என்றும் தர்ப்பித்துத் தன்னிடது பாரிசமான நீர்க்கரையிலே சங்க முத்திரையினாலே "அத்திராயப்பட் என்று குசையுஞ் சலமுங்கூட இறைத்துப் பின்பு பூணுால் வலமிட்டு இட்டகாமிய மந்திரங்கள் செபிக்கில் அந்தந்த மந்திரங்களினாலே சுவாகாந்தமாகச் சங்க முத்திரையால் தர்ப்பித்துக் குசை நீத்து ஆசமனம் கரநியாசம் பண்ணுக. என்று ஆதீனப் பிரதியல்லாப் பிரதியில் இருப்பது இல்லறத்தார்க்குச் சொன்ன விதி என்றறிக. -

பின்பு:ஆசமனம் அதரகத்திதொடுமிடம் கரநியாசம் அங்கநியாசம் பண்ணித் தீர்த்தோப சங்காரஞ் செய்க. அதாவது முன்பு விந்துத் தான்த்திலிருந்து எடுத்துச்