பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II

சித்தர்கள் பூசாவிதிகள்



முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் 'ஓம் மகா கணபதியே நம:' என்று மூன்று தரம் தலையின் உச்சி இரு பக்கத்திலுங் குட்டிக் கொண்டு இரு கையுங் கூட்டிப் பெருவிரல் இரண்டும் பிணைந்திட நமஸ்கார முத்திரையினாலே 'ஓம் சிவகுருவே நம: என்று கும்பிடுதலாகிய இதுவே கணபதி குரு வணக்கமாம்.

நீர்த் தூய்மை

வலக்கை விரல்களைச் சேர்த்து நீட்டிச் சிறு விரல் கீழாகப் பதாகை முத்திரையால் சலத்தை இடமும் வலமுமாக 'ஓம் அத்திராயப்பட் என்று நீக்கி நிரீட்சணம், புரோட்சணம், தாடனம், அப்பியுட்சனம், தாளத்திரையம், திக்குபந்தனம், அவகுண்டனம், தேனு முத்திரையாகிய அட்டசங்காரஞ் செய்க.

நிரீட்சணம்

வலக்கைச் சுட்டு விரலையும் நடு விரலையும் மடக்கி மற்றை விரல்களை நீட்டிய நிரீட்சண முத்திரையினாலே பெருவிரல் அணிவிரல்களுக்கு நடுவே 'ஓம் சிவாய நம:' என்று சலத்தைப் பார்ப்பது நீரீட்சணம்.

இனி, வலக்கை அணிவிரல் பெருவிரல், நடுவிரல் மூன்றுஞ் சேர்த்து மற்ற விரல்களை நீட்டி அவ் இரு விரல்களின் நடுவே பார்ப்பதுநீரீட்சணம் என்பர் ஒருசாரார். இந்தப் பாவனை சலத்திலேயுள்ள அநுசிகத்தைச் சூரிய நேத்திரத்தால் உலர்த்தி அக்கினி நேத்திரத்தால் தகனப்படுத்திச் சந்திர நேத்திரத்திலிருக்கிற அமிர்தத் தினால் நனைந்து சலம் குளிரும்படி பார்ப்பது.