பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கடைப்பிடி; புண்ணியஞ் செய்' என்று முடிந்து பொருள்படு வதும் இதன்பாற்படும். இவ்வறநெறிச்சாரச் செய்யுளில், கூர்த் தகு என்ற தனிச்சொல் நிற்குமிடத்துக் கூத்தற்கு என்று பாடங்கொண்டு, கூத்தற்கு வாளேறோ டோசை விளைநிலம் என்பதற்குச் சிவபுண்ணியஞ்செய்' என்று பொருள் கொண் டாருமுண்டு. . -

3. "நல்வினை நாற்கால் விலங்கு நவைசேரும்

கொல்வினை யஞ்சி குயக்கலம்-மெல்ல வுறுதியு மல்லவு நாட்பேர் மரப்பேர் இறுதியி லின்ப நெறி.” (௧௨)

இந்த அறநெறிச்சாரச் செய்யுளும் இவ்வணியின்பாற்படும். நாற்கால் விலங்கு -முயல்; குயக்கலம் - அகல் : நாட்பேர் - (நாள் - நட்த்திரம்) சோதி (சுவாதி); மரப்பேர் - தேறு (தேற்றா மரம்) எனக்கொண்டு, நல்வினை முயல்; நவைசேரும் கொல்வினை யஞ்சி யகல்; மெல்லவுறுதியுமல்லவுஞ் சோதி; இறுதியிலின்ப நெறி தேறு, என்று பொருள்படுவது காண்க. •.

8. காதை கரப்பு

- யாதேனும் ஒரு செய்யுளுக்குரிய எழுத்துக்களெல்லாம் தேடி எடுக்கத் தக்கனவாக அமைய வேறோர் செய்யுளையியற்றி, அதன்கண் முதற்செய்யுளை மறைத்து வைப்பது காதை கரப் பாகும். காதை - கவி; காப்பு - மறைத்தல்.

இதற்கு உதாரணம் :

அகலல்குற் றேரே யதர மமுதம்

பகர்தற் கரிதிடையும் பார்க்கின்-முகமதிய

முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீல

மைத்தடங்கண் வெவ்வேறு வாள்.” (க௨)

இச்செய்யுள், பாங்கற்குக் தலைவன் தலைவியின் இயல்கூறியது.

இதன் பொருள்:-நண்பனே நான் கண்ட மாதர்தம் உருவின் தன்மையை யான் கூற நீ கேட்பாயாக அகல் அல் குல் தேரே - அகன்ற அல்குற் பிரதேசமானது தேராகும்; அதரம் அமுதம்-வாயிதழ் அமுதமாகும்; இடையும் பகர்தற்கு