பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#46 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

வருவது ஓர் - பின்பு நீ வரும் ஆற்றிடையுள்ள ஏதத்திற்கு அஞ்சாது வருவதனை ஆலோசித்துப் பார், அ தப - அவ்வபாய நிலை கெட, எம் புகல் வேறு இருத்தி வைத்திசின் - எமக்குப் பற்றுக்கோடாயுள்ள வேறோரிடத்தில் எம்மைச் சேர்த்தி வைப் பாயாக ; இச்சை கவர் எமது வேண்டுகோளை அங்கீகரித்துப் ஆர்த்தி செய்வாயாக; தாவா அருங்கலம் நீயே - எமக்குக் கெடாத கிட்டுதற்கரிய ஆபரணம் போன்றவன் நீயேயாவாய் (எ - று.) - - - - -

'என்' , 'எம் ' என்று வந்தது ஒருமை பன்மை மயக்கம். ஓர் ஒர் என நின்றது குறுக்கல் விகாரம். இது பாங்கி தலைவற்கு ஆற்றிடை வரும் ஏதங் கூறி வரைவு கடாயது. இச் செய்யுளில் ஈற்று மொழிக்கு முன்னெழுத்தாகிய லகாரம் மொழிக்கு முதலாகாமையின், அதனை விடுத்து அதற்கு முன் உள்ள ககரத்தை முதலாகக்கொண்டு ஒரோரெழுத்து இடைவிட் டுத் தலை கீழாகப் படிக்கக் கிடைத்தது,

கருவார் கச்சித்

திருவே கம்பத்

தொருவா வென்ன

மருவா வினையே.' (க௬) என்னுந் தேவாரச் செய்யுள். - -

10. சக்கிர பந்தம்

வண்டிச் சக்கிரம்போல அமைக்கப்பட்ட சித்திரத்திலே சிற் சில இடங்களில் எழுத்துக்கள் பொதுவாக நிற்கும்படி அமையப் பாடிய செய்யுள் சக்கிர பந்தமாம். சக்கிரம் -வண்டியின் உருளை ;

பந்தம் - கட்டு. இதன் இலக்கணம்,

" சக்கிரத் துட்டடு மாறுத றானே

சக்கிர பந்த மெனச்சாற் றினரே.”

என்னும் மாறனலங்காரச் சூத்திரத்தானறிக. - - இச்சக்கிர பந்தம் பெரும்பாலும் நான்காரைச் சக்கிரம், 'ஆறாரைச் சக்கிரம், எட்டாரைச் சக்கிரம் என மூவகைப்படும். ஆரைக்கால் என்பன சக்கிரத்தின் குடத்திலிருந்து விளிம்பு வலயத்திற் சென்று பொருந்தும்படி தைத்திருக்கும் கட்டை களாம்,