பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) திரியங்கி 66's

பன்ன முடியா வுவதியே நன்மணிப் பாதிரியே சொன்னவி வையிற்றி னாப்பனுற் றாயெதிர் தோன்றுதியே. - (௩௬)

என்ற கலாவதி நாடகச் செய்யுளும் இக்நடுவெழுத்தலங்காரத் தின்பாற்படும்.

20. திரிபங்கி

யாதேனும் செய்யுளாய் நின்றே ஒரு பொருள் பயப்ப தன்றி, அதுவே மூன்று செய்யுளாய்ப் பிரிந்து முடிந்து வெவ் வேறு பொருள் பயக்கத்தக்கதாகவும் பாடப்படுவது திரிபங்கி யாகும். . . . .

திரி - மூன்று; பங்கி-பங்கமுடையது; பங்கம் - பேதம்.

இதற்கு.உதாரணம் :

"ஆதரந் தீரன்னை போலினி யாயம்பிகாபதியே மாதுடங்காவன்னி சேர்சடை யாய்வம்பு நீண்முடியாய் ஏதமுய்த் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார் ஓதுமொன் றேயுன்னு வாரமு தேயும்பர் நாயகனே". ( ௩௭)

என வரும்.

இக்கட்டளைக் கலித்துறையிலே அடிதோறுமுள்ள முதற் சிர்களையும் இரண்டாஞ்சீர் முதலசைகளையுஞ் சேர்க்க.

"ஆத ரந்தீர் மாது பங்கா ஏத முய்ந்தா ரோது மொன்றே" (௩அ)

எனவரும் ஒரு வஞ்சித்துறையாக முடியும்.அதன்பின் நான்காஞ் சீர்களிலுள்ள முதலாமசைகள் வரையும் நான்கடிகளிலும்

படிக்க,

"அன்னைபோ லினியாய், வன்னிசேர் சடையாய், இன்னல்சூழ் வினைதீர் உன்னுவா ரமுதே" (௩௯)