பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) கூட சதுர்த்தம் - 535

இச்செய்யுளின் நான்காமடியிலுள்ள எழுத்துக்களெல்லாம் ஏனைய மூன்றடிகளுள்ளும் நிற்குமாறு காண்க.

இதன் பொருள் :-புகை தகை சொல் -புகையும் நெருப் பின் தன்மையையுடைய சொற்களையும், படை கை - ஆயுதங்களை ப்பற்றிய கைகளையும், கதம் கண், கோபம் பொருந்திய

கண்களையும், பிறை பல் - பிறைத்திங்கள் போலும் வளைந்த வக்கிர தந்தங்களையும் கறுத்த கருநிறத்தையுமுடைய, பகை திறம் - பகைவராகிய அசுர சாதியென்னும், சொல் கெட -பேரும் கெட்டழிய, செற்ற - தொலைத்த, கச்சி பதி துர்க்கை - காஞ்சி புரத்திற் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் துர்க்கா தேவி யாகிய, பொற்பு தகைத்த - அழகு தங்கிய, தித்தித்த - இனிமை வாய்ந்த, துத்தத்த - யாழின் இசை போலும், சொல் - சொல்லே யுடைய, தத்தை - கிளி போன்றவளிடத்து, பத்தி திறத்தே திகைத்த சித்தத்தை - பக்தி செய்யும் விஷயத்தில் மயக்க மடைந்து தடுமாறிய உள்ளத்தை, துடைத்த பின்- மயக்க நீங்கிய பிறகு, பற்று கெட கற்பது - அகங்கார மமகாரங்களாகிய இரு வகைப் பற்றுங் கெட்டு ஞானத்தைப் பெறுவது உண் டாகும்

(எ.று)

'துர்க்கையாகிய தத்தையின் பத்தித்திறத்தே எனக் கூட் டுக. அகங்காரம் - யான் என்னும் பற்று; மமகாரம்- என தென்னும் பற்று. ஒப்: "யானென தென்னுஞ் செருக்கறுப். பான்" (குறள் - 346)

இனிக் கூட சதுர்த்தத்திற்கு இலக்கணம் மாறனலங்கார முடையார் முன் சொன்னதற்குச் சிறிது வேறுபாட்டுடன் பின் வருமாறு கூறுவர் : 8

பாடலி னாலாம் பதம்பொறி வரியிடைக்

கூடமுற் றதுவே கூட சதுர்த்தம்.” கூட சதுர்த்தமாமாறு உணர்த்துதனுதலிற்று.

இதன் பொருள் -நாலடியானாயவொரு செய்யுளி னாலாம்

பாதம் ஏனைய மூன்று பாதங்களையு மேனின்று கீழிழிந்தும் கீழ்

நின்று மேலேறுவதுமாக எழுதி முடித்தவரி:மூன்றி னிடை வரியின் மறைந்து நிற்பது கூடசதுர்த்தமா மென்றவாறு

இதற்கு உதாரணம்