பக்கம்:சித்தி வேழம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக்கும் கலங்கார் 19 பயம் உண்டாகாதாம்: யமனுக்கும் பயப்படி வேண்டாம்; கரடி, புலி, யானைகளுக்கும் பயப்பட வேண்டாம் என்று பாடுகிருர் அருணகிரியார். சலங்காணும் வேந்தர் தமக்கும்அஞ் சார்;யமன் சண்டைக்கஞ்சார்; துலங்கா நரகக் குழிஅனு கார்:துட்ட நோய்அணுகார் கலங்கார் புலிக்கும் கரடிக்கும் யானைக்கும்; கந்தன் நன்னூல் அலங்காரம் நூற்றுள் ஒருகவி தான்கற்று அறிந்தவரே என்பது அந்தப் பாட்டு. கலங்கார் யானைக்கும் என்பதை இப்போது நன்ருகத் தெளிந்தேன். இதை எங்காளும் மற வேன்' என்று சொல்லும்போது எனக்கு மேலே பேச வாய் வரவில்லை. ά அதுமுதல் கந்தர் அலங்காரம் சொல்லி இந்தப் பயனேத் சொல்லும் போதெல்லாம் என் கண்முன் இலங்கைக் காடும் அதனிடையே காரை ஒட்டிய சாரதியின் தோற்றமும் கிற் கின்றன. அருணகிரியார் வாக்கு உண்மை வாக்கு என்பதில் சிறிதும் ஐயத்துக்கு இடமின்றி, முருகன் திருவருள் தெளியவைத்ததை எண்ணி உருகுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/26&oldid=825753" இலிருந்து மீள்விக்கப்பட்டது