பக்கம்:சித்தி வேழம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சித் தி வேழம் அமைச்சராக இருந்ததோடு சரி. அருணகிரிநாத சுவாமி களோ பல வகையான மக்களின் இயல்பைப் பார்த்து, இரங்கி மனம் உருகினவர். அவருக்கு முருகப் பெருமான் கருணே நிரம்பிய கடவுளாகத் தோற்றின்ை. தடுத்து ஆட் கொள்ளும் திறன் கருணே மிகுதியைக் காட்டுகிறது. பக்குவம் உட்ைய ஆன்மாக்கள் கல்லின்பம் அடையும்படி அருள் செய்வது இயற்கையான வழி. அப்படி இல்லாமல் தன்னை மறந்த கிலேயில் செல்கின்ற ஆன்மாக்களுக்குப் பக்தியைக் கொடுத்து அவர்களேத் தடுத்து இறைவன் ஆட் கொள்கிருன். சுந்தரமூர்த்தி சுவாமிகளே அப்படி ஆட் கொண்டான். அப்பர் சுவாமிகளையும் அவ்வாறே ஆட் கொண்டான். இப்படித் தடுத்தாட்கொள்ளும் பெருமை முருகப் பெருமானிடத்திலும் சிறந்து கிற்கிறது. அது வள்ளியம் பெருமாட்டியின் வரலாற்றில் தெரிகிறது. மற்ற அடியார்களே இறைவன் தடுத்து ஆட்கொண்ட வரலாறு களேச் சைவ வைணவ புராணங்கள் சொல்கின்றன. வள்ளியம்மையைத் தடுத்து ஆட்கொள்ள முருகன் சென்றது மிக மிகச் சிறந்த பண்பு. சன்மார்க்கத்தில் வருகின்ற பேரின்பத்தை வள்ளியம்மை பெற்ருள். அதை அருண கிரியார் வள்ளி சன்மார்க்கம் என்று வள்ளிமலைத் திருப் புகழில் பேசுகின்றர். முருகப் பெருமான் வள்ளியைத் தடுத்து ஆட்கொண்டான் என்பதை அவர் பல இடங்களில், குறிப்பாகவும். வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிருர், உல்கியற் பாசத்தில் கட்டுப்பட்டு, பிரபஞ்சச் சேற்றில் உழலும் மனிதன் முருகனிடத்தில் உண்மையான அன்பு பூண்டு, நெஞ்சம் கிெழ்ந்தால், மனம் உருகில்ை, அவன் கருணே செய்ய வருவான் என்ற பெரிய கம்பிக்கையை உண்டாக்குவது அருணகிரியாரின் இயல்பு. யோகம் செய்து முயற்சி பண்ணி, மூலாதாரத்து அக்கினியை மேல் எழுப்பி, ஆதாரங்களே எல்லாம் கடந்து சென்று, சகஸ்ரார சக்கரத்தை அடைந்து, அங்கே பொழியும் அமுதத்தைப் பருகலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/34&oldid=825762" இலிருந்து மீள்விக்கப்பட்டது