பக்கம்:சித்தி வேழம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சித்தி வேழம் யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்" என்பது திருக்குறள். 45 வேறு வகையாகச் சொன்னல், “யாதனின் யாதனின் தேங்கியான் நோதல் அதனின் அதனின் உளன்' என்று வேறு கு றளேயே சொல்லிவிடலாம். இவ்வாறு வருகிற துன்பங்கள் நாளாக ஆக வளர்ந்து வருகின்றன. முயற்சி வளர வளர, உடம்பு வளர வளர, சுற்றம் வளர வளர, துன்பங்களே வளர்கின்றன. நாளாக ஆக உடல் தளர்கிறது; அதனால் நாம் துன்பம் அடைகிருேம். கம் தளர்ச்சியைக் கண்டு நம்மை அணுகுவோர்கள் அணுகு வதில்லை; அதை நினைத்தால் மிக்க துயரம் ஊறுகிறது. மனிதப் பிறவியே துன்பந்தான் என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிருர்கள். - - 'பிறந்தார் உறுவது பெருகிய κειμώ" என்பது மணிமேகல. t ஒரு பிறவியில் மாத்திரமா இந்தத் துன்பம் பிறவி தோறும் துன்பம் குவிகிறது: மலேமலேயாகக் குவிகிறது, இந்த மலேயைப் போக்க ஒர் உபாயமும் இல்லையா? நமக்கு அவ்வாறு செய்யும் ஆற்றல் இல்லே. ஆனல் வேறு யாருடைய உதவியையாவது கொண்டு இந்த இன்னலெனும் மலேயை அழித்துவிட முடியுமா? ഥാതഥ് அழித்தவர்கள் யார் @೮ಹಥಿಆfಹನ? ಾ! இப்போது நினைவுக்கு வருகிறது. முருகன் கிரெளஞ்ச மென்னும் மலேயை அழித்தான். தன் திருக்கரத்திலுள்ள வடிவேலே ஏவி அந்த வெள்ளிமலையைப் பொடிப் பொடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/50&oldid=825780" இலிருந்து மீள்விக்கப்பட்டது