பக்கம்:சித்தி வேழம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சித் தி வேழம் "ஆம், அங்கே ஒரு குரா மரம் இருக்கிறது. அதன் குளிர்ந்த நிழலில் அவன் எழுந்தருளியிருக்கிருன்." “அவனுடைய அங்க அடையாளங்களைத் தெரிந்து கொண்டாயா?” - "கன்ருகத் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவன் தன் திருக்கரத்தில் வேற் படையை ஏந்தியிருக்கிருன். அதனல் அவனே வேலன் என்றும் சொல்வதுண்டு. செக்கச் செவே லென்று இருப்பான். உலகத்தில் சில மக்களேச் சிவப்பாக இருக்கிருர்கள் என்று சொல்வது வெறும் உபசாரம். உண்மையாகவே சிறந்த செங்கிறம் படைத்தவன் என் சேந்தன்." - - உன் சேந்தன? "ஆம், சேந்தன் என்ருலே சிவந்த வண்ணமுடையவன் என்று பொருள். அவன் என் மனத்திலும் கோயில் கொண்டான். ஆகையால் எனக்கு உறவினனுகிவிட்டான். மால் உலாம் மனந்தந்த அவனே என் சேந்தன் என்று சொல்வதில் தவறு என்ன?' இவ்வாறு தன் மகளோடு உரையாடிய தாய் அவள் வாயிலாக எல்லாவற்றையும் உணர்ந்துகொண்டாள். தேவ லோக நாயகனை முருகன்மேல் காதல் கொண்டிருக்கிருள் என்று உணர்ந்து வியப்பில் மூழ்கினுள். அயல் வீட்டில் இன்னர் இருக்கிருர்கள் என்று கூடத் தெரிந்து கொள்ளாத பேதை அவள். மிகவும் மென்மை யான உடலும் மென்மையான உள்ளமும் படைத்தவள். அவள் இப்படித் தேவர்குல முழுதாளும் குமரவேளைக் கண்டு அவன்பால் காதல் கொண்டாள் என்பதை எண்ண எண்ணத் தாய்க்கு வியப்பு மேன்மேலும் ஓங்கியது. - - அந்த அன்னேயின் தோழி ஒருத்தி, "உன் மகள் என்ன, ஒரு மாதிரியாக இருக்கிருளே!” என்று கேட்டாள். உடனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/64&oldid=825795" இலிருந்து மீள்விக்கப்பட்டது