பக்கம்:சித்தி வேழம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சித்தி வேழம் ஆவதில்லை. இத்தனை சொல்லியும் சொன்னதாகவே இல்லை." "நீ சொல்லியவை எல்லாமே ஒப்புப் பொருள் அல்ல வென்ருல் அவனே எப்படித்தான் சொல்வது? - "அழகே அவன் வடிவம். உலகத்தில் அழகுள்ள பொருள் கள் பல உண்டு; ஆலுைம் அவன் அழகைப் பார்த்த கண் களுக்கு வேறு ஒன்றும் அழகாகத் தோன்ருது. இத் திருமேனி, அழகை உடையது என்று சொல்வது கூடப் பிழை; அவன் திருமேனி வேறு, அழகு வேறு என்பது இல்லே. அழகே வடிவெடுத்திருக்கிறது. அழகா? அழகுள்ளே சிறந்த அழகரசு என்று ஒன்று இருந்தால் அதற்கு இதுதான் வடிவம் என்று சொல்லவேண்டும்." ४० - பரிந்து செஞ் சுடரோ பரிநியோ மின்னே! பவளத்தின் குழவியோ! பசும்பொன் சொரிந்த சிந்துரமோ து மணித் திரளோ! சுந்தரத் தரசு இது என்ன. "நீ பார்த்தவன் முருகன? வேறு தேவன?” "நன்ருகச் சொன்னாய்! எனக்கு அவனை அடையாளம் தெரியாதா? வரிந்து கட்டிய வில்லேக் கையில் ஏந்திக் கொண்டு நிற்கிருன் அவன். பகைவருக்கு வெம்மையைத் தரும் வெஞ்சிலே அது. வேல் எடுத்த கையிலே வில்லையும் எடுப்பவன் என்பது எனக்குத் தெரியும். "ஆம், ஆம்; வானேர் வணங்கு வில் தானேத் தலைவ' என்று நக்கீரரும் பாடியிருக்கிருர். திருவிடைக்கழியில்தானே அந்தப் பெருமகனைத் தரிசித்தாப்' - "ஆம்; வேதமும் சாத்திரங்களும் தெரிந்த வைதிகர் களாகிய அந்தணர் வாழும் திருவிடைக்கழியில் திருக்குரா மரத்தின் நிழலில் அவன் கின்றிருந்தான். வெஞ்சிஇலக்கை மைந்தகிைய முருகன் அவன் என்பதை நன்கு அறிந்தேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/96&oldid=825830" இலிருந்து மீள்விக்கப்பட்டது