பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

நட்பு

உலக நடைமுறையில் நட்பு என்ற சொல்லுக்குப் பன்முறையும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பொருள் ஒன்று உண்டு. பலருக்கு நட்பு என்ற சொல்லின் பொருள் தெளிவாகத் தெரியாமல் இருப்பது வியப்பில்லை;

நாம் பழகுகின்ற எல்லோரையுமே நண்பர்கள் என்ற கணக்கில் வைத்துக்கொள்ளக் கூடாது. ஒருவருடன் பல்லாண்டு நெருங்கிப் பழகிய பின்புதான் அவரை நண்பர் என்ற சிறப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும். "நட்பு ஆராய்தல்" என்ற பெயரில் தனியாக ஒரு அதிகாரம் வைத்து ஆசிரியர் திருவள்ளுவனார் தெளிவு படுத்துகிறார். நண்பர்கள் என்ற பெயருக்கு உரியவர்கள் யாவர் என்பதனை மிகமிக விளக்கமாகச் சொல்லுகிறார்.

"நேற்று மாலையில் தான் ஒருவரைச் சந்தித்தேன். உடனே அருமையான நண்பராகி விட்டார். இன்று காலையில் என்னைச் சந்தித்த பொழுது என் மீது உயிரையே விடுகிறார், அவ்வளவு நெருக்கமாகி விட்டார், என்று ஒருவர் சொன்னால், அது நட்புக்கு இலக்கணமாகிவிடாது. ஒருநாள் கூட முழுமையாகப் பழகாதவர் மறுநாளே இவர் மீது உயிரை விடுகிறார் என்றால், அடுத்த நாளைக்குள் இவருடைய உயிரை, எடுத்துவிடுவார் என்பதாகும்!

ஆதலால் தான், நண்பர்கள் என்று ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுதெல்லாம், அன்பாகப் பேசி, பழகிக் கொள்ளுதல் என்பது மட்டுமல்ல, நீண்ட நாட்கள் பழகி' ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

தேவையான காலத்தில் எல்லாம், நண்பனுடன் நின்று தோளோடு தோள் கொடுத்து அவருடைய துன்பத்தையும் தன் துன்பம் போல் கருதி, அதனை நீக்கி இணைந்து வாழ்வது தான், நட்புக்குரிய இலக்கணங்களில் முதன்மையானதாகும்.சி.க.---7